ஜனாதிபதி அநுர பணிப்புரைக்கு தேர்தல் ஆணைக்குழு தடை !

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அறிவிக்கப்பட்ட மானியத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட உரம் மற்றும் எரிபொருள் மானியத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு 25000 ரூபா உர மானியமும் கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியமும் நாளை முதல் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல்

எனினும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என தேர்தலகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, தேர்தலின் பின்னர் உரிய கொள்கை தீர்மானங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மானிய பிரேரணை

இதேவேளை குறித்து உர மானியம் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானிய பிரேரணைகளும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுவிக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுரவின் பணிப்புரைக்கு தடை விதித்த தேர்தல் ஆணைக்குழு | Election Commission Stopped The Anura Kumara Order

எனினும் அப்போது ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல்கள் ஆணைக்குழு அதனை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

நெருப்பாகும் முஸ்லிம் அரசியல்!

Next Story

தமிழ் தலைவர்களுடன் இந்தியா முக்கிய கலந்துரையாடல்