ஜனாதிபதியாகின்றார் ஜீவன்!

நஜீப்

நன்றி 29.11.2026  ஞாயிறு தினக்குரல்

Jeevan Thondaman | This year's May Day celebration hosted by the Ceylon Workers' Congress in Kotagala exemplified the strength and unity of our labor...

அண்மையில் நடந்த ஊடகச் சந்திப்பொன்றில் ஐதேக. அஜித் மானப்பெரும ஐதேக.வுக்கு அரசாங்கத்தை ஒப்படைக்கும்படி வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

இன்று ஐதேக. சார்பில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் இருக்கும் ஒரே உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மட்டுமே.

ஒரு ஆசனத்தை வைத்திருந்த ரணில் ஜனாதிபதியான விதிப்படி பார்த்தால் மானப்பெரும கணக்குப்படி ஜீவன் நாட்டில் ஜனாதிபதியாகும் வாய்ப்பு என்றுதான் பார்க்க வேண்டி இருக்கின்றது.

இது போன்ற கதைகளைச் சொல்லி எதிர்காலத்தில் அரசியல் செய்யலாம் என்று ஐதேக. தலைவர்கள் எதிர்பார்க்கின்றார்களோ என்னவோ தெரியாது.

அதிகாரத்தை கைப்பற்றுவது எப்படிப் போனாலும் முதலில் சஜித்துடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வழியை பார்த்தால் ஆரோக்கியமாக இருக்கும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தே இன்று ரணிலை நிராகரிக்கின்றார். பொது மக்களும் கட்சியை ஏற்கெனவே குப்பையில் தள்ளி விட்டிருக்கின்றார்கள்.!

இப்படியான கதைகளை இனியும் நகைச்சுவையாகக் கூட மக்கள் பார்க்கத்தயாராக இல்லை.!

Previous Story

සලේගෙයි මව්ලානාගෙයි හෝටල් කාමර සිද්ධියේ ඇත්තම කතාව