ஏட்டுச் சுரக்காய் வியூகம்!

நஜீப்

நன்றி 29.11.2026  ஞாயிறு தினக்குரல்

சஜித்தின்  ஐமச. செயற்குழுக் கூட்டமொன்று நடந்திருக்கின்றது. கட்சியை மக்கள் மயப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் அங்கு முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு அமைப்பாளர் கிராம சேவகர் பிரிவுக்கு 10 பேர் வீதம் தெரிவு செய்து அவர்கள் மூலம் ஒரு வட்டாரத்துக்கு 100 பேரை இணைப்பது என்று அளந்து கொண்டு போனார்.

அதன்படி நாட்டில் 14000 கிராம சேவகர் வட்டாரங்கள். எனவே ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பேர். அவர்களின் ஊடாக 100 என்ற கணக்குப்படி 14மில்லியன் (ஒரு கோடி 40 இலட்சம்) உறுப்பினர்கள்.!

இந்த விளக்கத்தை கேட்டுக் கொண்டிருந்தவர்கள் இது ஏட்டுச்சுரக்காய் வியூகம் என்று கிண்டலடிக்க பாடம் எடுத்துக் கொண்டிருந்தவர் நொந்து போனாரம்.

மற்றுமொருவர் மொட்டுக் கட்சியையும் நாமலையும் பெரிதாக விமர்சிக்கக் கூடாது. எதிர்காலத்தில் கூட்டணிக்கு வாய்ப்பொன்று இருக்கின்றது என்றார்.

கதை கேட்டு சிறுபான்மை உறுப்பினர்கள் அதிர்ந்து போனதாகவும் ஒரு தகவல்.!

Previous Story

රෝහණ විජේවීරව,අත්අඩංගුවට ගත්,හමූදා ලොක්කාව හා බිරිඳව,ඝාතනය.කෙහෙළිය හා තිස්ස අත්තනායක හවුල්.

Next Story

සලේගෙයි මව්ලානාගෙයි හෝටල් කාමර සිද්ධියේ ඇත්තම කතාව