சூடு நடந்த இடத்தில் IS கொடி..

ஆஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம் நடந்த பகுதியில் ஐஎஸ் அமைப்பின் கொடிகள் இரண்டு கண்டு எடுக்கப்பட்டிருக்கின்றன.

அமெரிக்காவை போல ஆஸ்திரேலியாவில் அவ்வளவு சீக்கிரம் பொதுவெளியில் துப்பாக்கியை பயன்படுத்திவிட முடியாது. அப்படி இருந்தும், நேற்று துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது.

துப்பாக்கி ஏந்திய இரண்டு மர்ம நபர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதில் மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறை நடத்திய பதிலடி தாக்குதலில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் கொல்லப்பட்டார்.

Australia world

இந்த சம்பவம் பயங்கரவாதச் செயல் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் நடந்த இடங்களில் நடந்த சோதனைகளில் இரண்டு ஐ.எஸ் கொடிகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இது தீவிரவாத தாக்குதல் என்பதை உறுதி செய்திருப்பதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

முதற்கட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது 50 மற்றும் 24 வயதுடையவர்கள் என்பதும், இருவரும் தந்தை மகன் என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

போலீசார் நடத்திய எதிர் தாக்குதலில் தந்தை கொல்லப்பட்ட நிலையில், மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 6 துப்பாக்கிகளும் தந்தை சட்டபூர்வமாக வைத்திருந்தார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இவர்கள் இருவரும் போண்டி கடற்கரைக்கு காரில் வந்திருக்கிறார்கள். இந்த கார் அடையாளம் காணப்பட்டு அதில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், 2 ஐஎஸ் கொடிகள் மீட்கப்பட்டிருக்கின்றன.

மகனுக்கு IS செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு இருந்தது என்றும் ஆஸி காவல்துறை கூறுகிறது. ஏற்கனவே இந்த விஷயம் ஆஸி. உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது. எனவே, 6 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் உளவுத்துறையால் விசாரிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தத் துப்பாக்கிச்சூடு நேற்று மதியம் போண்டி கடற்கரையில் நடந்தது. ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியிருந்தனர். ஹனுக்கா என்பது இஸ்ரேலியர்களின் புனித பண்டிகையாகும்.

எனவேதான் கடற்கரையில் கூட்டம் இருந்தது. இந்த கடற்கரை சாதாரணமாகவே ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். நீண்ட குழல் கொண்ட துப்பாக்கிகளுடன் வந்த இருவர், அங்கு கூடியிருந்த மக்களை கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கினர்.

அங்கிருந்தவர்கள் பாதுகாப்பு தேடி ஓடத் தொடங்கினர். அவசரத்தில் தங்கள் உடைமைகளை மணலில் சிதறவிட்டு தப்பிச் சென்றனர். துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதும், சிலர் அருகிலுள்ள கடைகளிலும் கட்டிடங்களிலும் ஒளிந்து கொண்டனர்.

இத்தகைய பயங்கரமான சூழலிலும், இஸ்லாமிய நபர் ஒருவர், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை நெருங்கி அவரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்க முயற்சித்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

சஜித் அக்ரமின் இந்திய பின்னணி

Next Story

මී පැණි කියල තනිකර වසක් විකුණලා තියෙන්නේ!