சலே-மௌலான-சிஐடி-சட்டம்!

நஜீப்

நன்றி: 24.05.2026 ஞாயிறு தினக்குரல்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அசாட் மௌலான செனல் 4-வுக்கு வழங்கிய நேர்காணல் சார்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அவரை அண்மையில் இலங்கை உளவுத்துறை அதிகாரிகள் பிரான்சில் இலங்கை தூதுவராலயத்தில் சந்தித்திருக்கின்றார்கள்.

மௌலானா நாட்டுக்கு வந்து சாட்சி அளிப்பதாகவும் சொல்லி இருந்தார். பாதுகாப்பு கருதி வருவதை தவிர்த்ததாலே சிஐடி. அதிகாரிகள் பிரான்சில் அவரை சந்திக்க வேண்டி வந்தது.

இது பற்றி நீதி மன்றில் வாக்குமூலம் கொடுத்த மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ், சாலேதான் சூத்திரதாரி. இதனை மௌலான வாக்குமூலம் உறுதிப்படுத்துகின்றது என நீதிமன்றில் குறிப்பிட்டார்.

தாக்குதல்தாரிகள் ஆறுபேருடன் சலே நேரடி சந்திபு. பிள்ளையான் ஆட்கள் 2000 பேர் மற்றும் டசன் கணக்கான முஸ்லிம் தீவிரவாதிகளுக்கும் உளவுத்துறை சம்பளமுமாம்.!

நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக சலேக்கு அதிரடிப்படையினர் துப்பாக்கிகளுடன் காவல். சலேக்கு உயிராபத்து என்பதால் அப்படி. நாட்டில் சாட்சிகள் கொல்லப்படுவதும் தெரிந்ததே.

Previous Story

ආණ්ඩුවෙන් 37ක් ඉවත් වෙන්නේ නෑ රනිල් අගමැති කරන්නෙත් නෑ රටම හෙල්ලෙන ප්‍රවෘත්ති‍යක්

Next Story

අලුත්ම සාක්ෂිවල කුතුහලය දැනවූ තැන්! අරවින්ද- අනුෂ්කා නොකී අමුත්තන් එදා රෑ හිටියාද?