சலே-கருணா கடவுச்சீட்டு!

நஜீப்  

நன்றி: 06.09.2026 ஞாயிறு தினக்குரல்

தற்போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தடுப்புக்காவலில் இருக்கும் சுரேஸ் சலேக்கு வைத்தியம் பார்க்கின்ற வேலைகள்தான் தொடர்ச்சியாக அங்கு நடந்து வருகின்றது. அவர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதைத் தவிர்த்து தனக்கு அரச செலவில் வைத்தியம் பார்க்கின்ற வேலையத்தான் இதுவரை சலே செய்து  கொண்டு வருகின்றார். அதுதான் அதிகாரிகளின் கடமைகளாகவும் இருந்து வருகின்றது.

இதற்கிடையில் கருணா அம்மானுக்கு சிங்களவர் ஒருவரின் பெயரில் போலியான கடவுச்சீட்டை தாயரிக்கும் நடவடிக்கையிலும் சுரேஸ் சலே சம்பந்தப்பட்டதாக குற்றச்சாட்டப்படுகின்றது. மேலும் அதில் கருணாவை சிக்கலில் மாட்டி விடுவதற்கும் இங்கிலாந்தில் சிறையில் அடைப்பதற்கும் சலே திட்டமிட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

இது கருணாவே சொன்ன தகவல். அப்படியாக இருந்தால் அரச ஆதரவுடன் துவான் சுரேஸ் சலே தனக்கு எத்தனை கடவுச் சீட்டுக்களை தயாரித்து எப்படி எல்லாம் பாவித்திருக்க முடியும் என்றும் சிந்திக்கத் தோன்றுகின்றது.!

Previous Story

ජොන්ස්ටන් ප්‍රනාන්දුගේ බලාපොරොත්තු කඩවෙලා!

Next Story

පූටින් දින තුනකට යුද්ධය නවතයි