சங்ககாரா விமர்சனம்: அஸ்வின் நறுக் பதில்

ஐபிஎல் தொடரில் சரியாக பந்துவீசாதது குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்கு அஸ்வின் நறுக் பதில் கொடுத்துள்ளார். இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், இந்தாண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் வியக்கவைத்த அவர், பந்துவீச்சில் ஏமாற்றினார்.

ஐபிஎல் 2022 – சிஎஸ்கே வீரர்களின் டாப் 5 இன்னிங்ஸ்.. தோற்றாலும் மீசைய முறுக்கு தருணம் அஸ்வின் பவுலிங் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மொத்தம் 17 போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 12 விக்கெட்களை மட்டுமே எடுத்தார்.

முக்கியமான போட்டிகளில் அஸ்வினின் பந்துவீச்சை எதிரணி வீரர்கள் சிக்ஸர்களாக விளாசினர். இதனால் தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு போனது.

விமர்சனம்: அஸ்வினின் தவறு குறித்து பயிற்சியாளர் சங்ககாராவே பேசியிருந்தார். அதில், அஸ்வின் ஒரு ஓவர் வீசுகிறார் என்றால், அதில் 3 பந்தை வித்தியாசமாக போட்டு, பரிசோதனை செய்கிறார். மீதமுள்ள 3 பந்துகளில் மட்டும் விக்கெட்கள் வீழ்ந்துவிடாது.

எனவே அஸ்வின் இனி வழக்கமான சுழற்பந்துவீச்சையே அதிகம் செய்ய வேண்டும். திடீரென புதுவகை பந்துவீசினால் தான் அதில் விக்கெட் கிடைக்கும் எனக்கூறியிருந்தார்.

அஸ்வின் தந்த பதில் இந்நிலையில் விமர்சனங்களுக்கு அஸ்வின் பதிலளித்துள்ளார். அதில், உண்மையை கூற வேண்டும் என்றால், எனது பவுலிங் குறித்து நான் தரமதிப்பிடு பார்க்கவே கிடையாது. வாழ்கையில் என்றுமே, அப்படி வீசியிருக்கலாம், இப்படி பவுலிங் செய்திருக்கலாம் என சிந்திக்கமாட்டேன்.

தினந்தோறும் என்ன நடக்கிறதோ அதை ஏற்றுக்கொண்டு செல்வேன். எனவே விமர்சனங்களை கண்டுக்கொள்ளவில்லை எனக்கூறினார். எதையுமே சிந்திக்கவில்லை தென்னாப்பிரிக்க தொடருக்கான வாய்ப்பு போனது குறித்து பேசிய அஸ்வின், எனக்கு இப்போது எதுவுமே தோன்றவில்லை.

ஏனென்றால் 5 மாதங்களாக பபுளில் இருந்துவிட்டு வந்துள்ளேன். சுதந்திரமாக வீட்டில் இருக்கிறேன். எனவே அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, கிடைத்துள்ள நேரத்தை மகிழ்ச்சியானதாக்க விரும்புகிறேன் எனத்தெரிவித்துள்ளார்.

Previous Story

விரட்டப்பட்ட முஷர்ரப் 

Next Story

அலிகர் கல்லூரி வளாகத்தில் தொழுகை: பேராசிரியர் மீது நடவடிக்கை!