சீனா:மின்சாரத்தில் இயங்கும் முதல் பயணிகள் விமானம்..!

தங்கள் நாட்டின் முதல் மின்சார விமான சோதனை வெற்றி பெற்றுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கி.மீ. தூரத்துக்குப் பறக்கும் வகையில் மின்சார விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விமான எரிபொருளுக்குப் பதிலாக முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் 19 இருக்கைகள் கொண்ட புதிய மின்சார பயணிகள் விமானம் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

சீன அரசு விமான நிறுவனமான ‘கோமாக்’, பேட்டரி தயாரிப்பு நிறுவனமான ‘சி.ஏ.டி.எல்.’ மற்றும் ஷாங்காய் ஜியாவோ டாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ‘சி.இ.-25ஏ’ என்ற இந்தப் புதிய மின்சார விமானத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

சுமார் 10 டன் எடை கொண்ட இந்த விமானம், ஒரு முறை சார்ஜ் செய்தால் மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் சுமார் 400 கி.மீ. தூரம் வரை பறக்கும் திறன் கொண்டது. 16 நிமிடங்களில் 60 கிமீ பறக்க முடியும் என்பது சீனா நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. இதுபற்றி விரிவாக பார்ப்போம்.

China s first electric passenger aircraft Can travel 400 km on a single charge

சீனா முதல் மின்சார விமானத்தை வெற்றிகரமாக மனிதர்களை வைத்து இயக்கி காட்டி சாதித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த விமானப் போக்குவரத்தை கொண்டுவர வேண்டும் என்பதில் சீனா நீண்ட காலமாக ஆர்வம் காட்டி வந்தது.

அதற்காகவே சீனாவின் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட CE-25A மின்சார விமானம், ஷான்டாங் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பின்ஜோ நகரில், முதல் முறையாக விமானிகளுடன் பறந்துள்ளது. இந்த தகவலை சீனாவின் விமானத் தயாரிப்பு நிறுவனமான COMAC அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 14ம் தேதி சீன அரசு தொலைக்காட்சியான CCTV வெளியிட்ட தகவலின்படி, இந்தச் சோதனைப் பறப்பில் இரண்டு விமானிகள் மற்றும் ஒரு விமானச் சோதனைப் பொறியாளர் பங்கேற்றுள்ளார்கள்.

இந்தச் சோதனை மொத்தம் 57 நிமிடங்கள் 46 விநாடிகள் நடைபெற்றது. இதில் விமானம் 16 நிமிடங்களுக்கும் சற்று அதிகமான நேரம் வானில் பறந்தது. மொத்தம் 60.4 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்திருக்கிறது. விமானத்தின் அனைத்து அமைப்புகளும் இயல்பாகச் செயல்பட்டது என்றும் சோதனையின்போது விமானத்தின் செயல்பாடு எதிர்பார்த்தபடியே அருமையாக இருந்தது என்றும் என்ஜினியர்கள் மகிழ்ச்சி தெவித்துள்ளனர்.

இந்த வெற்றி ஒன்றும் சீனாவிற்கு எளிதாக கிடைத்துவிடவில்லை.. மனிதர்களுடன் சோதனை என்ற கனவிற்காக பல மாதங்கள் சீன பொறியாள்ர்கள் உழைத்துள்ளனர். இதற்காக உருவாக்கப்பட்ட CE-25A விமானம் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி முதன்முறையாக ஆளில்லாமல் பறந்தது. அதன்பிறகு ஆளில்லா சோதனைகள் 19 முறை நடந்தது. அதன்பிறகு மனிதர்களை ஏற்றிச் செல்ல அனுமதி கிடைத்தது.

CE-25A விமானம் என்பது COMAC நிறுவனத்தின் முதல் மின்சார வணிக விமானமாக மாறப்போகிறது. நகரங்களுக்கு இடையிலான குறுகிய தூரப் பயணங்களுக்காக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 19 பேர் பயணிக்க முடியும். இந்த விமானத்தில் அதிகபட்சமாக 10 டன் வரை எடையுடன் இயங்கும். மணிக்க 300 கிமீ வேகத்தில் இயங்கும். 2400 மீட்டர் உயரத்தில் பறக்கும். 400 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் பயணிக்கும். பயணிகள் எண்ணிக்கை அதிகபட்சம் 19 பேர் வரை பயணிக்கலாம்.

இந்த விமானம் தனது முதல் மனிதர்கள் இயக்கிய சோதனைப் பறப்பை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பதால், வணிகப் பயன்பாட்டுக்கான சான்றிதழைப் பெறும் பணிகளில் இறங்கி உள்ளது.

சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாக அமைப்பான CAAC, CE-25A விமானத்துக்கான Type Certificate விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது.

ஒரு விமானத்தை வழக்கமான வணிகப் பயணிகள் சேவையில் இயக்குவதற்கு முன்பு, அதன் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்புத் தரநிலைகள் தொடர்பான ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெறுவது கட்டாயம் ஆகும்.

எனவே அதற்கு விண்ணப்பத்தை ஏற்பது அவசியம் அகும. விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும் உடனே அனுமதி கிடைக்காது. சான்றிதழ் நடைமுறைகள் முழுமையாக நிறைவடைய சில காலங்கள் ஆகும்.

9 பயணிகளுடன் 400 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய சீனாவின் இந்த மின்சார விமானம், எதிர்காலத்தில் நகரங்களுக்கு இடையிலான குறுகிய தூர விமானப் போக்குவரத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக வழக்கமான பயணிகள் விமானங்களில் இறக்கைக்குக் கீழே இரண்டு பெரிய என்ஜின்கள் இருக்கும். ஆனால், இந்தப் புதிய விமானத்தின் இறக்கைகளின் நீளத்தில் வரிசையாகப் பல சிறிய மின்சார விசிறிகள் (பேன்-கள்) பொருத்தப்பட்டுள்ளன.

பேட்டரியில் இருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் இந்த விசிறிகள் சுழன்று விமானத்தை முன்னோக்கிச் செலுத்துகின்றன. இதுவே விமானம் பறக்க காரணம் ஆகும்.

Previous Story

බලංගොඩ කස්සප අපවත් වෙලා | මේ ඉන්නේ හො#ර