குட்டிக் கதை – புதிய தலைமுறை

-யூசுப் என் யூனுஸ்-

தேர்தலுக்கு நிற்க்கின்ற ஒரு வேட்பாளரின்
சுட்டிப் பயல் அவனது அப்பாவிடம்…
தேர்தலுக்கு நிற்கப்போரேன்
மந்திரியாகப்போரேன்னு சொன்னீங்களே
ஒன்ணையுமே காணோம் என்றான்.
ஆமா சொன்னது உண்மைதான்.
அதில் எந்த மாத்தமும் இல்ல.
அப்ப என்ன பிரப்புலம்?
மிளகாய்தூள், கத்தி பொல்லு
எதாவது தட்டுப்பாடோ என்று
ஒரு போடு போட்டான் அந்தச் சுட்டி.

போடா… நீ வேற, அதெல்லாம் ஒகே!
அப்ப என்ன லேட்டு.
தேர்தலே நடக்கெல்லயே என்றார் அப்பா.
சுட்டியும் விடவில்லை. யாரு அத நடத்தனும்!
அது தாடிக்காரன் பார்க்குர வேல
என்றார் அப்பா.
அவங்க எங்கேயாவது போய்டாங்களா?
இல்ல.. இல்ல..! அவங்க இங்கதான் இருக்காங்க
நலமாத்தான் இருக்கார்.
கொரோனாதான் இப்ப அவர கொஞ்சம்
ஒதுங்கி நில்லு என்னு சொல்லி
நாட்டுல அதிகாரம் பண்ணுது.

அவர் கையாளாகாதவரா இப்ப எத
எடுத்தாலும் கொரோனாவக் கேட்டுப்
போட்டுத்தான் சொல்லனும் என்று
கதைய இழுக்குராரு.!
அப்ப நம்ம ஜனாதிபதி பிரதமர்
உடன் பிறப்புக்கள் என்ன சொல்ராங்க.!
அவங்க அவசரமா தேர்தல வெக்கத்தான் பாத்தாங்க
இப்ப அவங்களோட அதிகாரத்தையும்
கொரோனா குறைத்துப்போட்டுது.
அப்ப நம்ம சுகாதார தேவி ம்…மா சொன்னாங்களே
சித்திர 19க்குப் பின்ன நாட்டுல இருந்து
கொரோனாவ விரட்டிப்போடுவேன்னு
அந்தக் கதை என்னாச்சி என்றான் சுட்டி.

எல்லாக் கதையும் அப்பமும்
கோப்பியும் மாதிரிதான் நாட்டுல நடக்குது.
நீ கொஞ்சம் வாய மூடிக்கிட்டு
எங்கேயும் போகாம வீட்டுலே இரு.
பக்கத்துல விதாணயார் வூட்டுல
5000ரூபா காசு கொடுக்கிற வேல நடக்குது.
நான் கொஞ்சம் அங்கு போய்
முன்னுக்கு நிற்கணும் என்று
சுட்டிப் பிடியிலிருந்து நழுவினார் அப்பா.
சரி சரி அதுகூட குடிமக்கள் பணம் தானே
விதாணயாரப்பேசி ஒங்கட கையாலே
அத எடுத்து கொடுக்கப்பாருங்க.

அதோட யார் யாரெல்லாம் கொடுக்குர
இலவசப் பொதிகளையும்
எடுத்து ஒங்கட கையாலே கொடுக்கப் பாருங்கோ…
அப்ப சனங்க ஒங்களுக்கு வோட்டுப் போடும்.
அப்ப நீங்க தியவண்ண ஏரியில் போய் குடியேறலாம்
என்றான் சுட்டி!
அப்பாவின் எதிர்கால வாரிசல்லவா அவன்!

(24.05.2020 திகதி ஞாயிறு தினக்குரல் வார இதழில் வெளிவந்த ஒரு கதை இது. நமது அரசியலைப் பின்னணியாகக் கொண்ட கதை அதனால் இதனை மீள்பிரசுரம் செய்கின்றது.-நன்றி தினக்குரல்)

மிளகாய்த்தூள் மந்திரி தான் ஜனநாயத்தைக் காப்பதற்கு அப்படி நடந்து கொள்ள வேண்டி வந்தது என்று தேர்தல் மேடையில் சில தினங்களுக்கு முன்னர் பேசி இருக்கின்றார். அப்படியானால் இதன் பின்னர் நாடாளப்போகின்றவர்கள் மிளகாய்த்தூள் பார்சலுடன்தான் போவார்கள் போலும்.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

LOVE STORY

Next Story

சிரிப்பதற்கு - நல்ல பொண்ணு