நஜீப்
நன்றி: 19.04.2026 ஞாயிறு தினக்குரல்
நிலக்கரி இறக்குமதியில் பெரும் மோசடியை என்பிபி. அமைச்சர் குமார ஜயகொடிசெய்திருக்கின்றார். இது தொடர்பான நம்பிக்கை இல்லாப் பிரேணை கொண்டு வந்து அதில் எதிர்க் கட்சிகள் தோற்று அமைச்சர் தப்பி விட்டார்.
ஆனால் இத்துடன் இதனை விடக்கூடாது என்று ஜனாதிபதி அனுர இது பற்றி மேலதிக விசாரணைக்கு ஒரு ஆணைக்குழுவை நியமித்து (2009 முதல் 16.04.2026 வரை) இருக்கின்றார்.
அதுவும் தற்போது பதவியில் இருக்கும் நீதிபதிளையும் அதற்காக அவர் நியமனம் செய்ய இருப்பதாகத் தெரிகின்றது. ஆனால் பிரேரணை கொண்டு வந்த எதிரணியினர் இதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்கள்.
காரணம் இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்தவர்கள் அதிகாரத்தில் இருந்த காலத்திலும் நடந்த விவகாரங்கள் பற்றியும் இந்தக் குழு ஆராயும் போது தாமும் மாட்டிக் கொள்வோம் என்பதனை அறிந்ததால்தான் அவர்கள் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இது கிணறு வெட்ட பூதம் வந்த கதை.




