காலி மாவட்டத்தில் நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) பிரசார கூட்டத்திற்கு எதிர்பார்த்த அளவு மக்கள் வருகை தராமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த கூட்டம் பெரும் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் (04.09.2024) பகல் நடாத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சஜித் தரப்பில் அதிருப்தி
எனினும், கூட்டத்தில் கலந்துகொள்ள எதிர்பார்த்த அளவு மக்கள் வருகை தராமை சஜித் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.













