கள்ள வாகனங்கள் பரிசு!

நஜீப்

நன்றி 08.11.2026  ஞாயிறு தினக்குரல் 

நமது அரசியல்வாதிகள் அரசிடமிருந்து வாகனங்களை பெற்றுக் கொள்வது இருவகையில் அமைகின்றது. அது சட்டரீதியான மற்றும் சட்டவிரோத முறைகள்.

அவை தொடர்பான தேடல்கள் இன்று பல இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. இது தவிர முறைகேடாக வாகனங்களை வெளிநாடுகளில் இருந்து கடத்தி அவற்றுக்கு அரச வாகன பதிவு செய்கின்ற ஆர்எம்வி.

அதிகாரிகளை வைத்து கள்ள இலக்கத்தகடுகள் பொறுத்திக் கொண்ட கதைகளும் அதற்கான வழக்குகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

மொட்டு ஜொனி தானும் அந்த தவறை செய்ததை பகிரங்கமாக சில தினங்களுக்க முன்னர் ஏற்றிருந்தார்.

அத்துடன் நிறையவே முக்கிய தேரர்களுக்கு ராஜபக்ஸாக்கள் காலத்தில் இப்படி போலியான வாகனங்கள் நூற்றுக்கணக்கில் அன்பளிப்புச் செய்து இருப்பது இப்போது தெரிய வந்திருக்கின்றது.

இவ்வாறான போலி இலக்கங்களைக் கொண்ட வாகனங்களை பெற்றுக்கொண்ட மேலும் பல விஐபிக்கள் இருப்பதாகத் தெரிகின்றது.

முச்சக்கர வண்டிகளின் இலக்கங்களில் கூட விலைமதிப்பான வாகனங்கள் பதிவாம்.

 

Previous Story

ஈரான் போர் மொத்தமும் காலி: ட்ரம்ப்

Next Story

USA political 2026