நஜீப்
நன்றி 08.11.2026 ஞாயிறு தினக்குரல்
என்னதான் அனுரகுமார திசாநாயக்க கடும் போக்கு ஜேவிபி.காரராக இருந்தாலும் அவர் இன்று பிரதிநிதித்துவம் செய்கின்ற என்பிபி. அரசாங்கம் இந்த நாட்டில் வழக்கமான சம்பிரதாய அரசியல் பின்னணியைக் கொண்ட ஒரு அரசியல் யாப்பின் படி ஆட்சி செய்கின்ற அரசாங்கம் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நல்லதோ கெட்டதோ அவர்கள் இந்த அரசியல் விதிகளின் படிதான் பயணிக்க வேண்டி இருக்கின்றது. சிலர் அரசு கடும் போக்காக நடந்து கொள்ள வேண்டும்.
எதிரணியினர் மீது கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் அதற்கு வாய்ப்பே கிடையாது. என்னதான் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலயீனமான எதிரணி இருந்தாலும் எதிர்பார்க்கின்ற எல்லாவிடயங்களையும் இரவோடு இரவாக சாதிக்க முடியாது.
ஒரு புரட்சி ஊடக இவர்கள் அதிகாரத்துக்கு வந்திருந்தால் மட்டுமே அப்படி செய்ய முடியும். நிருவாகம் இன்னும் பழையதண்டவலத்திலே பயணிக்கின்றது.





