ஐதேக.தலதா கண்டுபிடிப்பு!

நஜீப்

நன்றி 14.12.2025 ஞாயிறு தினக்குரல்

மிகப் பெரிய பேரழிவை நாடு சந்தித்திருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நேரத்தில் ஐதேக. செயலாளர் தலதா அதுகோரல பேரழிவுக்கு ஒரு காரணம் சொல்கின்றார். என்பிபி. பொய்களைத் தாங்க முடியாமலே மழை கொட்டி பூமியை பிளந்து விட்டது.

இது கட்சியின் கண்டு பிடிப்பல்ல. தனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் விளக்கம் தருகின்றார். அவர் ஒரு சட்டத்தரணியும் கூட. சரி ஐதேக. செயலாளர் சொன்னதுதான் நடந்தது என்று வைத்துக் கொள்வோம். அதே நேரம் இந்தோனேசியா மலேசிய தாய்லாந்திலும் இதே மழையால் பேரிழிவுகள் நடந்திருக்கின்றன.

அத்துடன் சவூதி ஈராக் போன்ற நாடுகளிலும் மோசமான வெள்ளம் கரைபுரண்டு அங்கும் பெரும் சேதங்கள். இதற்கு என்ன நியதி என்பதனையும் செயலாளர் கண்டுபிடித்து உலகுக்குச் சொன்னால் நல்லது.

இந்த நாட்டு மக்களைக் காட்டுவாசிகள் என்று எண்ணியே இப்படியான கருத்துக்களை மக்கள் மனங்களில் விதைக்க முயல்கின்றார்கள் போலும்.!

Previous Story

ஆஸ்திரேலியா: யூதர்களை குறிவைத்து நடந்த துப்பாக்கிச்சூடு – 12 பேர் பலி

Next Story

தண்ணீரை விட கச்சா எண்ணெய் ரேட் கம்மி!