ஈரானுக்கு எதிராக இலங்கை கடற்படை!

Red Sea | Definition, Map & Facts for Exam | Maps for UPSC

ஈரான் சார்பு ஹவுதி போராளிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எதிராக செங்கடல் பகுதியில் இலங்கை கடற்படையின் கப்பலை நிலை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (04.01.204) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

செங்கடலில் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் நடத்திய தாக்குதல்கள் குறித்து சர்வதேச கப்பல் நிறுவனங்களிடையே அச்சம் அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கப்பல் போக்குவரத்து

இந்த தாக்குதல்களின் மூலம், ஹமாஸக்கு ஆதரவாக இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதாக ஹவுதி போராளிகள் கூறுகின்றனர்.

எனினும் செங்கடலில் ஏற்பட்டுள்ள இந்த இடையூறு காரணமாக சரக்கு போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, விநியோகம் நேரம் தாமதமாகி வருகிறது.

செங்கடல் பகுதியில் நிலைகொள்ளும் இலங்கை கடற்படை: ஈரான் ஆதரவு போராளிகளுக்கு எதிராக புதிய நகர்வு | Houthi Militias Decided Deploy Sl Navy Ship Redsea

செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதால் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இதை எதிர்கொள்ள கப்பல்கள் செங்கடலில் செல்லாமல் தென்னாப்பிரிக்காவை சுற்றி வந்தால் சரக்கு செலவுகள் அதிகரிக்கும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

Previous Story

பிரதமர் பதவிக்கு வரும் நாமல்!

Next Story

ரூ.170.72 கோடி வென்ற இந்திய டிரைவர்