ஆஸ்திரேலியா: யூதர்களை குறிவைத்து நடந்த துப்பாக்கிச்சூடு – 12 பேர் பலி

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிட்னியில் அமைந்திருக்கும் போன்டி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா: யூதர்களை குறிவைத்து நடந்த துப்பாக்கிச்சூடு – 12 பேர் பலி
சம்பவ இடத்தில் இருக்கும் போலீசார்

இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை தலைவர் கிறிஸ் மின்ஸ் கூறியதாக சிட்னிக்கான பிபிசி செய்தியாளர் டிஃபனி டர்ன்புல் தெரிவித்துள்ளார். மேலும், இதில் 11 பேர் காயமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Live updates: At least 11 dead in shooting at Australia's Bondi Beach targeting Jewish community, officials say

“பொது இடத்தில் இரண்டு பேர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக” நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய கிழக்குப் பகல் நேரப்படி மாலை 6 மணியளவி நடந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் எனவும் மற்றொரு நபர் காயமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிபிசி செய்தியாளர் டெஸ்ஸா வோங்
 சம்பவ இடத்தில் பிபிசி செய்தியாளர் டெஸ்ஸா வோங்

பிபிசி செய்தியாளர் டெஸ்ஸா வோங்கின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் போன்டி கடற்கரையின் வடக்குப் பகுதியிலுள்ள ஒரு நெரிசல் மிக்க இடத்தில் நடந்தது.

“கடற்கரைக்குப் பின்னாலுள்ள புல்வெளிப் பகுதிக்கு அருகில் ஹனுக்கா என்றழைக்கப்படும் யூத நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அங்கு மக்கள் கடற்கரைக்குச் செல்லப் பயன்படுத்தக்கூடிய ஒரு நடை மேம்பாலம் இருந்தது,” என்று அவர் கூறுகிறார்.

“துப்பாக்கிச் சூடு நடப்பதற்குச் சுமார் ஒரு மணிநேரத்திற்கு முன்பாக நான் அந்தப் பாலத்தைக் கடந்தேன். அங்கு குறைந்தது 200 பேர் இருந்தனர். உரத்த இசை ஒலித்துக் கொண்டிருந்தது மற்றும் பல நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தன,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “சம்பவம் நடந்த இடம் முழுவதும் ஓர் உலோகத் தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது. மக்கள் உள்ளே நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் ஒரு வாசல் இருந்தது. அது மக்களின் உடைமைகளைச் சோதிக்கும் இடம் போலத் தோன்றியது. அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே இருந்தன,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்தத் தாக்குதல் சிட்னியின் யூத சமூகத்தைக் குறிவைத்து திட்டமிடப்பட்டது. அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஓர் இரவு, ஒரு பயங்கரமான கொடூரத் தாக்குதலால் சிதைக்கப்பட்டுவிட்டது,” என்று சிட்னி காவல்துறைத் தலைவர் கிறிஸ் மின்ஸ் தெரிவித்தார்.

யூதர்களின் ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாட அங்கு வந்திருந்த சுமார் ஆயிரம் பேர் அந்த இடத்தில் இருந்ததாக நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் எம் லேன்யன் குறிப்பிட்டுள்ளார். சேர்க்கப்பட்டனர்.

Previous Story

காற்று AKD பக்கம் தான்!

Next Story

ஐதேக.தலதா கண்டுபிடிப்பு!