கண்டியின் சில பொலிஸ் பிரிவுகளில் ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் குறித்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பிரதான அமைப்பாளர் கே.டி. லால்காந்த இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள்
கடந்த 2ம் திகதி மஹய்யாவ பிரதேசத்தில் ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இந்த பிரசாரக் கூட்டம் தொடர்பில் கண்டியின் சில பொலிஸ் பிரிவுகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை பொலிஸார் கிழித்துள்ளதாக லால்காந்த குற்றம் சுமத்தியுள்ளார்.
வேட்பாளர்கள் குறித்த சுவரொட்டிகளை ஒட்ட முடியாது என்ற போதிலும் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
விசேட விசாரணைகள்
எனினும், இவ்வாறான ஓர் பின்னணியில் பிரசார சுவரொட்டிகள் அகற்றப்பட்டதாக லால்காந்த குற்றம் சுமத்தியுள்ளார்.
சில பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் பழைய அரசாங்கம் இன்னமும் ஆட்சியில் இருப்பதாக கருதி செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து குறித்த சம்பவங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்படடுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.