ஆய்வால் அரசு அதிர்ச்சி!

நஜீப்

நிதி அமைச்சர் பி.ஆர். தற்போது அரசின் செல்வாக்குத் தொடர்பாக ஒரு ஆய்வை மேற்கொண்டிருக்கின்றார். அந்த ஆய்வில் அதிர்ச்சியான பல தகவல்கள் வெளியே வந்திருப்பதாகத் தெரிகின்றது. ஆளும் தரப்புக்கு தற்போது மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு 42 சத வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது.

அணுரகுமார தலைமையிலான ஜேவிபி செல்வாக்கு மேலும் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாம். அடுத்து மைத்த்ரி தலைமையிலான அணிக்கு 4 சதவீத அதிகரிப்பும் சஜித் தலைமையிலான அணிக்கும் 3 சதவீத அதிகரிப்பு. என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இதனால் ஜேவிபி கூட்டங்கள் நடக்கின்ற இடங்களில் அரச உளவுத்துறையினர் விசாரணைகளை நடாத்தி வருகின்றார்கள்.

அண்மையில் கொழும்பு பௌத்த விகாரை ஒன்றில் நடைபெற்ற  கூட்டம் தொடர்பாக விசாரிக்க உளவுத்துறையினர் பலமுறை விகாரைக்குப் போய் ஏற்பட்டாளர்களுக்குத் தொந்தரவு கொடுத்திருக்கின்றார்கள். இது பற்றி ஜேவிபி. ஹந்துஹெத்தி அண்மையில் பகிரங்கமாக அரசைக் கண்டித்திருந்தார்.

நன்றி: ஞாயிறு தினக்குரல் 23.01.2022

Previous Story

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா: சொந்த திருமணத்தை திடீரென நிறுத்திய காரணம்!

Next Story

ஐக்கிய அரபு அமீரகம்: ட்ரோன்களுக்குத் தடை