நஜீப்
நன்றி 08.11.2026 ஞாயிறு தினக்குரல்
என்னதான் அரசுகள்-அரசாங்கங்கள் அதிகாரத்தில் இருந்தாலும் சில நாடுகளில் எதிரணியினர் அரசுக்கு பலமான சாவால்களைக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.
அதனால் பதவியல் இருக்கின்ற அரசு எப்போதும் ஒரு அச்ச உணர்வுடன்தான் காய் நகர்த்திக் கொண்டிருக்கும். ஆனால் நமது நாட்டில் இன்று பிரதான எதிர்க் கட்சித் தலைவராகவும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் இந்த அரசுக்கு நல்ல பாதுகாப்பாக-கவசமாக செயலாற்றிக் கொண்டு வருகின்றார்.
இதனை ஆளும் தரப்பில் இருக்கின்றவர்களே பகிரங்கமாக பேசியும் வருகின்றார்கள். திட்டவட்டமான அரசியல் கொள்கைகள் ஏதும் சஜித்திடம் கிடையாது. அவர் கிடைக்கின்ற எல்லா ஆலோசனைகளையும் எடுத்துக் கொள்கின்றார்.
இதனால் தனது ஆரதரவாலர்களையும் கூட்டணியில் இருப்போரையும் மனிதன் பகைத்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
கட்சியில் இருப்போரே இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் இங்கு இருப்போமோ தெரியாது என்று பேசுகின்றார்கள்.
இது நாட்டுக்கு ஆரோக்கியமான ஒரு செயல்பாடாகத் தெரியவில்லை.





