அம்பாறை: புலிகள் வெட்டுகின்றனர். கூச்சலிட்டவர்கள் கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதாகத் தெரிவித்து, அம்பாறை- நவகிரியாவ காட்டிலிருந்து கூச்சலிட்டவாறு ஒடி வந்து கிராமவாசிகளை பயமுறுத்திய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பக்கிஎல்ல பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளனர்.

“புலிகள் எம்மை வெட்டுகின்றனர்”என கூக்குரலிட்டவாறு சிலர் ஒடி வருவதை அவதானித்த மின் வேலியைப் பாதுகாக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு தரப்பினரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பக்கிஎல்ல பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அத்துடன் அவர்கள் 119 என்ற அவசர பிரிவினருக்கும் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அம்பாறை மற்றும் அரன்தலாவ பொலிஸ் விசேட பிரிவினர், இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து அப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது சந்தேகநபர்கள் வருகைத் தந்த மோட்டார் சைக்கிள், 3 சைக்கிள்கள் மற்றும் ஓட்டோவொன்று என்பன அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேகநபர்கள் 7 பேரும் திவுலான காட்டுப் பகுதியில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதாகத் தெரிவித்து, அம்பாறை- நவகிரியாவ காட்டிலிருந்து கூச்சலிட்டவாறு ஒடி வந்து கிராமவாசிகளை பயமுறுத்திய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பக்கிஎல்ல பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளனர்.

“புலிகள் எம்மை வெட்டுகின்றனர்” என கூக்குரலிட்டவாறு சிலர் ஒடி வருவதை அவதானித்த மின் வேலியைப் பாதுகாக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு தரப்பினரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பக்கிஎல்ல பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அத்துடன் அவர்கள் 119 என்ற அவசர பிரிவினருக்கும் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து , அம்பாறை மற்றும் அரன்தலாவ பொலிஸ் விசேட பிரிவினர், இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து அப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது சந்தேகநபர்கள் வருகைத் தந்த மோட்டார் சைக்கிள், 3 சைக்கிள்கள் மற்றும் ஓட்டோவொன்று என்பன அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேகநபர்கள் 7 பேரும் திவுலான காட்டுப் பகுதியில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Story

யாழ் பல்கலையில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!

Next Story

இலங்கை அரசியல்வாதிகள் யாருக்கும் சர்வதேச சமூகம் அடைக்களம் கொடுக்க கூடாது - யஸ்மின் சூக்கா