வாராந்த அரசியல்

-நஜீப்-

2024 வரவில்லா செலவுகள்!

Budget 2024 – The Island

வரவில்லாத செலவுகள், இது எப்படிச் சாத்தியம்? அப்படி ஒர் செலவு வழக்கில் கிடையாது. இது எமது வாதம். வரவில்லாத செலவுகளைச் செய்வோர் ஏதாவது ஓர் இடத்தில் தனது தேவைகளுக்காக கை நீட்ட வேண்டும். அல்லது கொள்ளை மோசடிகளில் ஈடுபாடு கொள்ள வேண்டும்.

இது தனி மனித வரவில்லா செலவுக்கான முன்னேட்பாடு. இப்படிச் செய்கின்ற ஒரு தனி மனிதன் சமூகத்தால் நிராகரிக்கபடும் மனிதனாக அல்லது அவமானப்பட்ட ஒரு மனிதனாவது இயல்பானது. இதே காரியத்தை ஒரு நாடு செய்கிகன்ற போது, அந் நாடும் சர்வதேச அரங்கில் மூக்குடைபடுவது தவிர்க்க முடியாதது.

தொடர்ச்சியாக இதனைத் தொழிலாகச் செய்யும் ஒருவன் இதனையே வாழ்வாக்கிக் கொள்வதும் அதற்கு இசைவாகிவிடுவதை நாம் பார்த்திருக்கின்றோம். இன்று நமது நாட்டு நிலையும் இதுதான். இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் நாட்டை இந்த நிலைக்கு கொண்டு சென்ற தலைவர்களே நாம் கடந்த காலங்களில் மேற்கொண்ட தவறுகள்தான் இதற்கு அடிப்படைக் காரணம் என்று பகிரங்க அரங்குகளில் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

2024க் கான ஜனாதிபதி ரணில் வரவு செலவும் ‘வரவில்லா செலவு’ அறிக்கை இதனால் இது வெற்றி பெறாது

மே க்கு முன் தேர்தல்!

State Assembly Election Result 2022 LIVE: How to Check UP, Punjab, Uttarakhand, Goa and Manipur Election Result on ECI app and Website - results.eci.gov.in

நாம் மேலே குறிப்பிட்டிருக்கின்ற ஒரு செய்தியின் படி 2024 வரவு செலவு அறிக்கை படுதோல்வி. ஒரு நாட்டில் வரவு செலவு அறிக்கை வெற்றி பெறாத போது அந்த நாடு பொருளாதார நெருக்கடிகளுக்கு இலக்காவது தவிர்க்க முடியாதாது.

எனவே சாத்தியம் இல்லாத இந்த அறிக்கையைச் சமர்ப்பித்திருப்போர் யதார்த்தத்தை பகிரங்கமாக அறிவிக்காத போதிலும் விளைவுகளை நன்கு அறிந்துதான் வைத்திருக்கின்றார்கள். ஏப்ரல் மே மாதங்கள் ஆகின்ற போது, நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

எனவே 2024 ஜனாதிபதித் தேர்தல் வரை காத்திருந்தால்  அந்தக் காலகட்டத்தில்  நாட்டில் அமைதி இன்மைக்கு வாய்ப்புக்கள். எனவே அரசாங்கம் வருகின்ற மே மாதத்துக்கு முன்னர் தேர்தலுக்கு போவது ஆட்சியாளர்களுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.

அதனால்தான் நாம்  முதலில் வருவது பொதுத் தேர்தல் என்று நாம் தொடர்ச்சியாகச் சொல்லி வருகின்றோம். தேர்தலை நடாத்தாமல் முடியுமானால் இந்த அரசாங்கத்தை நகர்த்துவதுதான் அதிகாரத்தில் இருப்போரின் விருப்பமாக இருந்தாலும், குளிப்பதற்கு இழுத்துச் செல்லப்படும் நாயைப் போல் ஆட்சியாளர் தேர்தலைச் சந்திக்க வேண்டி வரும்.

ஜேவிபி. எதிர் கூட்டணி!

Anura Kumara openly challenges Sajith for a debate

இலேசான காய்ச்சல் உடம்பில் இருப்பது போல நாட்டில் மொல்லிய தேர்தல் ஜூரம் ஒன்று மக்கள் மத்தியில் தெரிகின்றது. தேர்தல் என்று வரும் போது நாம் கடந்த வரம் பேசி இருந்தது போல தேர்தல் கூட்டணிகள் அதற்கான முஸ்தீபுகளும் நடப்பதும் வழக்கம் தான்.

பொதுவாக அணுராவும்-சஜித்தும்தான் பிரதான போட்டியாளர்கள்-அணிகள் என்ற ஒரு கருத்தும் நாட்டில் இருக்கின்றது. அதே நேரம் தமது அறுபத்தி ஒன்பது (69) இலட்சம் வாக்குகளும் வங்கியில் போட்ட பணம் போல அப்படியே பத்திரமாகத்தான இன்னும் இருக்கின்றது என்று வாதிடும் மொட்டுக் கட்சிக்காரர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அவர்கள் நம்பிக்கைக்கு நாம் குறிக்கே வர வேண்டியதில்லை. அவர்களும் நம்பிக்கையுடன் வாழட்டும். ஆனால் தனது பிரதான போட்டியாளர் அணுரா என்பதனை சஜித் உணர்வதாகத் தெரிகின்றது. இதனால் மொட்டில் இருந்து பிரிந்து செயலாற்றுவோரை தன்னுடன் இணைத்து ஒரு பொதுக் கூட்டணியாக மனிதன் களத்துக்கு வரும் ஏற்பாடு தற்போது நடக்கின்றது. இதிலுள்ள ஆச்சர்யம் விமல் தரப்பும் ஓகேயாம். பல சந்திப்புக்களும் நடந்திருக்கின்றன. இது நம்பகமான தகவல்!

பலம் காட்டும் மொட்டு!

SLPP reaping what it sowed BY M.S.M Ayub - ரெலோ - தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

தமது பலத்தை காட்ட மொட்டுக் கட்சிக்காரர்களை கொழும்பு-சுகததாச வருமாறு அழைப்பு (15.12.2024) விடுக்கப்பட்டிருக்கின்றது. அரசியல் நிகழ்வுகள் மீது அவதானமாக இருப்பவர்கள் என்றவகையில் நாம் இந்த ஏற்பாடுகளில் சில விடயங்களை அவதானிக்க முடிகின்றது. அதன்படி இந்த ஏற்பாட்டில் நாமலை ஹீரோவாக்கும் திட்டமும் இருக்கின்றது.

இதற்கு மெதமூலனையின் ஒத்துழைப்பும் நாமல் நட்பு வட்டாரங்களின் பக்கதுணையும் இருக்கின்றன. இந்த பலத்தைக் காட்ட கொழும்பு-சுகததாச வரும் இவர்கள் அந்த அரங்கை நிரப்புவார்கள். அதற்கான பலமும் பணமும் வளமும் அவர்களுக்கு நிறையவே இருக்கின்றன. நாட்டில் (14000) வரையிலான கிராம சேவகர் பிரிவுகள் இருக்கின்றன.

அதிலிருந்து ஒருவரை அழைத்தாலும் அந்த அரங்கை மொட்டால் நிரப்ப முடியும். இதற்கு அப்பால் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்பு மனுவில் கையெழுத்துப் போட்ட ஒரு வேட்பாளர் படை-பட்டாளமும் அவர்களிடம் இருக்கின்றது. எனவே இந்தப் பலத்தை காட்டும் கூட்டத்தை அவர்கள் வெற்றிகரமாக நடாத்த முடியும்.

இதில் நாமலுக்கு ஒரு பொறுப்பான பதவியைக் கொடுத்து களத்தில் இறக்கிவிடும் ஏற்பாடுகளும் அங்கே நடந்து வருகின்றது. கோட்பாதர் பசில் ஏற்பாடுகளை கவணித்து வருகின்றார்.

சுசில் அதிரடி தகவல்கள்!

UNICEF report may be correct: Susil | Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition

கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந் வெளியிட்ட இரு கருத்துக்கள் தொடர்பில்  இப்போது பார்ப்போம். கடந்த வருடத்துடன் பார்க்கின்ற போது இந்த வருடம் முதலாம் தரத்துக்கு  மாணவர்கள் விண்ணப்பங்கள் ஐம்பது ஆயிரத்தால் (50000)  இது வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

இந்தளவு சரிவு எப்படிச் சாத்தியம்? பெற்றோர் அரச பாடசாலைகள் மீது நம்பிக்கை இழந்து விட்டார்களா? அல்லது நாட்டில் பிறப்பு வீதம் குறைந்து விட்டதா? அடுத்து 2024ம் கல்வி ஆண்டுக்கு வசதியாக இந்த வருடம் இருபத்தி ஐயாயிரம் (25000) ஆயிரம்  புதிய ஆசிரிய நியமனங்களை செய்ய இருப்பதாக அமைச்சர் அடிக்கடி பேசி வந்தார்.

ராஜாங்க அமைச்சரும் தான் போன வந்த இடங்களில் இதனை சொல்லி விளம்பரம் செய்து கொண்டு திரிந்தார். ஆனால் இப்போது இந்த நியமனங்களை வழங்குவதில் சட்டச் சிக்கல் என்று அமைச்சர் சுசில் அறிவித்திருக்கின்றார். அதனால் நியமனங்கள் நடக்க வாய்ப்புக்கள் இல்லை.

அடுத்த வருடம்தான் இது நடக்கும் என்று கல்வி அமைச்சர் கூறுகின்றார். தேர்தல் காலம் வரும் போது இந்த நியமனங்களை செய்து அதில் இலாபமடையும் நோக்கமோ என்னவோ தெரியாது.?

Previous Story

அமெரிக்கா மீது கோபம் ரஷ்யாவுடன் நெருக்கம்! மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

Next Story

தேர்தலும் வட்வரியும்