நஜீப்
நன்றி: 19.04.2026 ஞாயிறு தினக்குரல்
பதினொரு வருடங்களுக்குப் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது வருமானம் பற்றிய ஆவணங்களை கையளித்திருக்கின்றார். இவற்றை வழங்குவதை அவர் இது வரை தவிர்த்து வந்திருந்தார்.
நல்லாட்சியில்இதுபற்றி கேள்விகள் எழுப்பப்பட்டு அதிகாரிகள் பல நாடுகளுக்கு சென்று தேடினாலும் வெறுங்கையுடன்தான் திரும்பி வந்தனர்.அந்த வங்கிகளும் ராஜபக்ஸாக்கள் தொடர்பான கணக்குகளை வழங்குவதை தவிர்த்திருந்தன.

யசந்த கோதாகொட போன்ற செல்வாக்கான அதிகாரிகள் கூட போய் எடுத்த முயற்சிகள் இதில் வெற்றி பெறவில்லை.
ஆனால் ஈத்தல என்ற செல்வாக்ககான இணையத்தளம் டுபாய் மஸ்கார்ட் வங்கியில் மஹிந்த தொடர்புடைய எட்டுக் கணக்கில் 93000 கோடி ரூபா இருப்பதாக சொல்லி இருக்கின்றது.
இது 11 வருடங்களுக்கு முன்புள்ள கணக்கு. அப்படியானால் இன்று அந்தத் தொகை என்னவாக இருக்கும்.?
மேலும் நாமல் ராஜபக்ஸவின் கணக்கிலும் 14000 கோடிகள் இருப்பதாகவும் ஈத்தல தகவல் தருகின்றது.



