சர்வதேச தரமான நூலாம்!

நஜீப்

நன்றி: 19.04.2026 ஞாயிறு தினக்குரல்

சில வாரங்களுக்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை கம்மன்பில் எழுதிய நூலில் சொல்லி இருந்தார்.அதற்கான பரப்புரையும் சிறப்பாக நடந்தது. இதில் புதிய தகவல் ஏதுமில்லை.

இந்தக் கூட்டத்துக்கு போனதற்காக சஜித்துக்கு ஏ.ஐ.பிரேமதாச என்றும் புதிய ஒரு நாமமும் கிடைத்திருக்கின்றது. இதற்கு மத்தியில் சரத் வீரசேக்கரசஹ்ரான் இல்லை முஜிபர்தான் சூத்திரதாரி என்று முரண்படுவதையும் நாம் பார்த்தோம்.

இப்போது ஞானசாரத் தேரர் உதய கம்மன்பில புத்தகம் பற்றி இப்படி ஒரு சான்றிதழ் கொடுத்திருக்கின்றார். இது சர்வதேச தரம் வாய்ந்த ஒரு ஆய்வு நூல் என்று அவர் புத்தகம் எழுதிய கம்மன்பிலவை உச்சியில்தூக்கி இருக்கின்றார்.

சர்வதேச தரம் என்றவார்த்தை பற்றி என்ன சொல்வதென்று எமக்குப் புரியவில்லை.

ஆனாலும் அப்படி எல்லாம் பெரிய வார்த்தைகளைச் சொல்லி இவர்கள் உண்மையான குற்றவாளிகளை புனிதர்களாக்க கடுமையாக உழைக்கின்றார்கள். அதுவும் காசுக்கு பார்க்கும் வேலையாக இருக்கலாம்.!

Previous Story

தமிழகத்தில் நெருக்கமான ஒருதேர்தல் முடிவே வரும்