ராஜாக்களுக்கும் தேர்தல் ஆசை!

-நஜீப்-

நடக்க இருந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஆப்பு வைத்த போது அமைதியாக இருந்த மொட்டுக் கட்சி, இப்போது தேர்தல் வேண்டும் என்று கோஷம் போடத் துவங்கி இருக்கின்றது. மொட்டுக் கட்சி செயலாளர் சாகர தேர்தல் ஆணைக்குழுவுக்கே போய் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.

Rajapaksa Family Stands To Receive In Commission Anywhere Between US$1.2 To US$ 1.8 Billion During 2005-15 - Colombo Telegraph

அந்தக் கட்சியில் இருக்கும் ஜொன்ஸ்டன், மஹிந்தானந்த, ரோஹித்த போன்றவர்களும் தேர்தல் வேண்டும், அதில் நமக்குத்தான் வெற்றி என்றும் பேசி வருகின்றார்கள். அண்மையில் மஹிந்த ராஜபக்ஸாவும் மக்களின் தேர்தல் உரிமைகளை அரசு மதிக்க வேண்டும் என்றும் கோட்டிருந்தார்.

விஜேதாச கூட அப்படித்தான். அரசு யார் அவர்கள் யார்? இப்படிக் கதைத்துக் கொண்டே தேர்தல்களுக்கு ஆப்பு வைக்க நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. வருகின்ற நாட்களின் மக்களுக்கு மிகப் பெரும் வரிச்சுமைகள் காத்திருக்கின்றது என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலாலே எச்சரித்திருக்கின்றார்.

அப்படி இருக்கின்ற போது தேர்தல்களுக்கு வாய்ப்பு வருமா? இந்நிலையில் முதலில் பொதுத் தேர்தலுக்கு ஜனாதிபதிக்கு பசில் அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிகின்றது.

நன்றி: 08.10.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

அமைதி நோபல்: ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகம்மதிக்கு! 

Next Story

பாலத்தீனம்-இஸ்ரேல்:கேள்விகளும் பதில்களும்!