நஜீப்
நன்றி: 07.06.2026 ஞாயிறு தினக்குரல்

மொட்டுக் கட்சியினர் நாடு தழுவிய கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் சஜித் விசிரிகள் சிலர் நாமும் ஏதாவது செய்ய வேண்டும்.
மாகாணசபைத் தேர்தல் கூட வரலாம் என்று தலைவரிடத்தில் நினைவு கூர்ந்திருக்கின்றார்கள். கருத்துச் சொன்னவர்களுக்கு சாதகமான எந்தப் பதிலும் கிடைக்கவில்லையாம். காரணம் சஜித்திடம் அதற்கெல்லாம் செலவு செய்ய காசு கிடையாதாம். இதனை அவரே சகாக்களிடம் சொல்லியும் இருக்கின்றார்.
இதற்கிடையில் தேர்தல் ஆசனங்களை வெற்றி கொள்ள வழக்கமாக ரணில்-சஜித் கூட்டணிக்குள் நுழைகின்ற தனித்துவ சிறுபான்மை தலைவர்ளைப்போல தயாசிரியும் இந்த முறை சஜித் கூடாரத்துக்குள் நுழைந்து அதில் மனிதன் வெற்றியும் பெற்றார்.
இப்போது அதே கூடாரத்துக்குள் இருந்து கொண்டு தலைவருக்கு எதிராக தயாசிரி கிளர்ச்சியை தூண்டுவதாக ஆதரவாலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியாம்.
அதே நேரம் தயாசிரி கருத்துக்கு ஆதரவாகவும் சிலர் உள்ளேயும் இருக்கின்றார்களாம். அவர்களைத் தலைவருக்கும் தெரியுமாம்.




