பெண் உடம்பில் கரு எங்கே வளர்ந்திருக்கு பாருங்க!

கனடாவை சேர்ந்த 33 வயது பெண்ணிற்கு கருவானது அவரது கல்லீரலில் வளர்ந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.பிரசவம் என்பது பெண்ணின் மறுபிறவியாகும். ஒரு குழந்தை கருவாகி அது வளர்ந்து வெளியுலகிற்கு வரும் வரை பல அபாய கட்டங்களை பெண்கள் கடக்க வேண்டியுள்ளது. கரு வளர்ந்தும் உதிரப்போக்கு, குறை பிரசவம், டெலிவரி ஆகும் சமயத்தில் நஞ்சுக் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொள்தல், கருப்பையில் இருக்கும் தண்ணீரை குழந்தை குடித்துவிடுதல், குழந்தைக்கு பிறக்கும் போதே மூச்சுத்திணறல் இப்படி பல பிரச்சினைகள் உள்ளன.

முன்னோர்கள்

இவற்றை எல்லாம் கடந்து எந்த வித நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமான ஒரு பிள்ளையை பெற்றெடுப்பது என்பது எத்தனை சவாலான விஷயம் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த காலங்களில் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் முன்னோர்கள், மூதாட்டிகள் எல்லாம் சர்வ சாதாரணமாக 8, 10 குழந்தைகளை பெற்றனர்.

கனடா பெண்

அப்படியிருக்கும் போது கனடாவில் 33 வயது பெண்ணுக்கு வினோதமான நிகழ்வு நடந்துள்ளது. அதாவது கருவானது கர்ப்பப்பையில் வளராமல் அவரது கல்லீரலில் வளர்ந்துள்ளது. இதுகுறித்து கனடாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஆய்வு மையத்தின் குழந்தைகள் நல சிகிச்சை நிபுணர் டாக்டர் மைக்கேல் நார்வே வீடியோவில் கூறுகையில், கடந்த 49 நாட்கள் தான் கருவுற்றிருப்பதாகவும் கடந்த 14 நாட்களாக உதிரப்போக்கு ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

பெண்ணின் கல்லீரல்

இதையடுத்து அவரது உடல்நிலையை சோதனை செய்து பார்த்ததில் அந்த பெண்ணின் கல்லீரலில் கருவானது வளர்ந்து வருவது தெரியவந்தது. இதற்கு இடம்மாறிய கர்ப்பம் என்பார்கள். அதாவது கருவுள்ள முட்டையானது கருப்பையில் தங்காமல் எங்கே சிக்கிக் கொள்வதுதான். இது போல் கருவானது கருமுட்டை குழாய், கருமுட்டை, கருப்பை வாய் உள்ளிட்டவற்றில் வளரும். இது அரிதாக நடைபெறும்.

விந்தணு, கருமுட்டை

ஆனால் கல்லீரலில் குழந்தை வளர்வது என்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். 1964 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை உலகிலேயே 14 பேருக்கு கல்லீரலில் கரு வளர்ந்துள்ளது. சில நேரங்களில் வயிற்று பகுதியில் கூட வளர்ந்ததை பார்த்துள்ளோம். ஆனால் தற்போதுதான் கல்லீரலில் வளர்ந்ததை பார்க்கிறோம். இதுதான் எனக்கு முதல்முறை அனுபவம். பெண்ணின் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை மூலம் அந்த கருவானது அகற்றப்பட்டது. எனினும் கருவை காப்பாற்ற முடியவில்லை. இந்த பெண்ணுக்கு கருமுட்டையும், விந்தணுக்களும் கல்லீரலுக்கு சென்று வளர்ந்துள்ளன என்றார்.

 

Previous Story

ஒமிக்ரான்:மின்னல் வேகத்தில்  பிரான்ஸ் பிரதமர்

Next Story

டாக்டர்: ஷாபிக்கு தொடர்ந்தும் தொல்லை!