நஜீப்
நன்றி: 21.06.2026 ஞாயிறு தினக்குரல்
நமக்கு வருகின்ற தகவல்களின் படி ஆளும் என்பிபி. மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்குத் தயாராகி வருகின்றது. அனேகமாக ஆளும் எதிரணிகள் அனைத்து தரப்புகளும் பழைய முறையில் தேர்தலுக்கு ஒப்புதலை வழங்கி விரைவான தேர்தலுக்கு வழிசமைக்க முடியும்.
வடக்குக் கிழக்கில் தமிழ் முஸ்லிம் தரப்புக்களுடன் ஆளும் என்பிபி.யும் முக்கோணப் போட்டிக்கு தயாராகி வருகின்றன. இது தவிர சில்லறைகளும் வரும். தெற்கில் என்பிபி.-அனுர ஐமச-சஜித் மொட்டு-நமால் பிரதான போட்டியாளர்களாக இருப்பார்கள்.
அதற்கு முன்னர் ஐதேக. இணைவு பற்றி கேட்டால் வக்கில்லாதவர்களுக்கு என்ன சீட்டா என்று மேலிடம் நிராகரிக்கின்றதாம்.
சு.கட்சி தனித்தே மாகாணசபைத் தேர்தலுக்கு வருமாம். ஈரான் போர் உடன்பாடுகள் வெற்றியளித்து பொருளாதாரம் சீரடைய அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு மற்றும் பொது மக்களுக்கு நிவாரணங்களையும் வழங்கி அரசு தேர்தலுக்குப் போகலாம்.





