தலிபான்-அமெரிக்க டீல்கள்!

-யூசுப் என் யூனுஸ்-

Taliban Invades Iran - Is USA Involved? | Iran-Afghanistan Border Clashes Explained - YouTube

தனக்கு எதிராக உலகில் துனிவுடன் செயலாற்றிக் கொண்டிருக்கும் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் போட்ட எந்தப் பொருளாதார நடவடிக்கைகளும் வெற்றிபெறத் தவறிவிட்டது என்பதனை, ஈரான் இன்று பெற்று வரும் அரசியல் பொருளாதார மற்றும் இரணுவ ரீதியிலான வெற்றிகள் காட்சிப்படுத்தி வருகின்றன.

இதனால் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடான இஸ்ரேலுக்கும் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றது. அதனால் புதிய வழிகளில் ஈரானுக்குத் தலையிடி கொடுக்க அமெரிக்க சிஐஏ மற்றும் இஸ்ரேலின் மெசாட் என்பன திட்டங்களைத் தீட்டி வருகின்றன.

Helmand River

அதன் ஓர் அங்கமாக தற்போது ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கின்ற தலிபான்களைப் பாவிக்க ஈரானின் எதிரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்று (குளத்து) நீரைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக தற்போது ஈரானுக்கும் ஆப்கானிஸ்தானுக்குமிடையே முறுகல் நிலை தோன்றி இருக்கின்றது.

What is the Iran-Taliban water conflict all about? | Explained News - The Indian Express

இதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஈரானுக்கு எதிராகத் தலிபான்களைத் தூண்டி விடும் நடவடிக்கைகள் தற்போது வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக  பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்க மற்றும் தலிபான்களுக்கிடையில் நடந்திருக்கின்றன. அதற்காக தலிபான் அரசுக்கு பல சலுகைகளும் கிடைக்க இருக்கின்றது.

நன்றி: 13.08.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பாக்.காபந்து பிரதமராக அன்வர்-உல்-ஹக் கக்கர்!

Next Story

ஜனாதிபதியை சந்தித்த பசில்!