நஜீப்
நன்றி 21.12.2025 ஞாயிறு தினக்குரல்
என்னதான் ஈரானில் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி சபாநாயகர் அமைச்சர்கள் என்று இருந்தாலும் அங்கு ஆன்மீகத் தலைவர் அயாத்துல்லா கமெயினி தான் தீர்க்கமான சக்தி.
அதே போன்று என்பிபி. ஜனாதிபதி பிரதமர் சபாநாயகர் அமைச்சர்கள் என்று இருந்தாலும் ஜேவிபி. கட்சியின் செயலாளர் டில்வின் சில்வாதான் அங்கு தீர்க்கமான சக்தி.
அதனால்தான் அந்தக் கட்சி இந்தளவு கட்டுப்பாடுகளுடன் முறையாகவும் தியாகத்துடனும் செயல்பட்டுக் கொண்டு வருகின்றது. பேரழிவு புனர் நிர்மானப்பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் கட்சிச் செயலாளர் டில்வின் பங்கு வெளியில் தெரிவதில்லை.
ஆனால் கட்சியில் இருக்கின்ற பலருக்கு அவர் பங்களிப்புத்தெரியும். இதனால்தான் நாமும் ஜேவிப்பி.யைப் போல கட்சி நிருவாகத்தை வடிவமைக்க வேண்டும் என்று சஜித் அணி நளின் ஒரு முறை பகிரங்கமாகப் பேசி இருந்தார்.
அவர்களினால் பேச மட்டுமே முடியும். அப்படி தியாகமாக ஒரு போதும் செயல்பட முடியாது என்றுதான் நாம் நம்புகின்றோம்.





