ஜெர்மன் புதிய சான்சலர் -ஓலாப் ஸ்கூல்ஸ்

ஜெர்மன் சான்சலராக ஒலாப் ஸ்கூல்ஸ் தேர்வு செய்யப்பட்டார். தற்போதைய சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் பதவி விலகினார்.

ஜெர்மனியில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கல் கட்சி பின்னடவை சந்தித்தது. இடதுசாரிக் கட்சியான சோசியல் டெமாக்ரெட்ஸ் கட்சி கூடுதல் இடங்களில் வென்றது. இக்கட்சி கிரீன்ஸ், மற்றும் லிபரல் ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கிறது. கூட்டணி ஆட்சிக்கு புதிய சான்சலராக சோசியல் டெமாக்ரெட்ஸ் கட்சியைச் சேர்ந்த ஓலாப் ஸ்கூல்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து புதிய சான்சலராக ஓலாப் ஸ்கூல்ஸ் பதவியேற்பதையடுத்து, தற்போதைய சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் பதவி விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் ஜெர்மன் நாட்டின் சான்சலராக பதவி வகித்த நிலையில் இன்று பதவி விலகுவதாகவும், தீவிர அரசியலிலிருந்து மெர்க்கல் ஓய்வு பெற போவதாகவும் ஜெர்மன் அரசு செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் செபர்ட் கூறினார்.

Previous Story

ஆன்டி இண்டியன் சினிமா விமர்சனம்

Next Story

வாரத்தில் நாலரை நாட்கள் மட்டுமே வேலை: UAE