நஜீப்
நன்றி 21.12.2025 ஞாயிறு தினக்குரல்
ரணிலின் சாகாவும் ஐதேக. முக்கியஸ்தருமான வஜிர அபேவர்தன நாங்கள் பேசுகின்ற கதைகளை – இரகசியங்களை ஒற்றுக் கேட்டுத்தான் அனுர அரசு தனது திட்டங்களை வகுத்துக் கொண்டு போகின்றது. இதுவும் ஒரு வகையில் கொள்ளை. நேர்மையற்ற வேலை என்பது வஜிர விடும் கதை.!
நமது அரசியல் வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு நஸ்டஈடு வழங்களை நாம் பார்த்தது கிடையாது. அந்த வகையில் இந்த அரசுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம். இது மு.கா. தலைவர் ஹக்கீம் அரசுக்கு கொடுக்கின்ற நற்சான்று.
அதே போன்று சஜித் கட்சி முக்கியஸ்தர் ஹிருனிகா பிரேமச்சந்திரவும் அனுரவை வெகுவாகப் பாராட்டி வருகின்றார். அதே நேரம் சஜித் கட்சியில் இருக்கும் பலர் அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.
இது சஜித்தின் ஐமச.வில் அரசின் செயல்பாடுகள் தொடர்பில் இருக்கும் முரண்பாட்டைக் காட்டுகின்றது.





