ஜனாதிபதியை சந்தித்த பசில்!

-நஜீப்-

ஆளும் தரப்பில் இருக்கின்ற மொட்டுக் கட்சியினரை பிளவுபடுத்தி அதன் மூலம் ஜனாதிபதி ரணிலைத் திருப்திப்படுத்தி அரசியல் சுய இலாபங்களைப் பெற்றுக் கொள்ளும்  ஒரு விளையாட்டு தற்போது ஆளும் தரப்புக்குள் நடந்து கொண்டிருக்கின்றது.

இதில் சாதக பாத நிலமைகள் இருந்தாலும் இப்படித் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்பதனை உணரும் மொட்டுக் கட்சி கோட்பாதர் பசில் இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணிலை இரகசியமாகச் சந்தித்துப் பேசி இருக்கின்றார்.

அப்போது பசில் நிமல் லன்சா நடவடிக்கைகள் தொடர்பில் தமது ஆட்சேபனைகளை அங்கு வெளிப்படுத்தி இருக்கின்றார். இது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம். நீங்கள் உங்களது நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டு செல்லுங்கள் என்று பிரச்சினையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பதில் கொடுத்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில்.

நான் லன்சாவுடன் பேசுகின்றேன் என்றும் அவர் பசிலை அங்கு சமாளித்திருக்கின்றார். தமக்கு இப்போது இருக்கின்றவர்கள் போதும். இதற்கு மேலும் நான் மொட்டுக் கட்சியில் இருந்து ஆட்களைக் காவு கொள்ள மாட்டேன் என்று லன்சா பசிலுக்குப் பதில் கொடுத்திருக்கின்றார்.

நன்றி: 13.08.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

தலிபான்-அமெரிக்க டீல்கள்!

Next Story

மிஸ் யுனிவர்ஸ் 2023 முறைப்பாடுகள்!