செலவு கம்மியான சஜித் ஆட்டம்!

நஜீப்  

 நன்றி: 20.09.2026 ஞாயிறு தினக்குரல் 

நாளை துவங்குகின்ற வாரம் பல முக்கியமான சம்பவங்கள் நாட்டில் நடக்கவுள்ளது.  22வது யாப்புத் திருத்தத்தை நிறைவேற்றி அரசு நீதிபதிகளின் வயதை நீடிக்கும் வேலையைப் பார்க்க இருக்கின்றது.

இந்த வாரம் நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் நாடாளுமன்றத்தில் முன்வைக்க இருக்கின்றார். என்பிபி.யும் மொட்டும் பேரணிகளை நடாத்திக் கொண்டு வருகின்றன. சஜித்தும் ஏதாவது செய்து தனது பக்கம் கவனத்தை ஈர்க்க வேண்டியுள்ளது.

இதனால் நாடாளுமன்றத்தில் 22வது பிரேரணை வருகின்ற போது நாடாளுமன்ற சுற்றுவட்டாரத்தில் அதற்கு எதிரான 24ல் ஒரு ஆர்ப்பாட்டத்தை சஜித் முன்னெடுக்க ஏற்பாடாம்.? பேரணிகள்-கூட்டங்களை நடாத்துவதைவிட குறைந்த செலவில் இதனைச் செய்து கொள்ளலாம்.

அதே நேரம் 2029 ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சி சார்பில் நாமலுக்கு களத்துக்கு வரத் தடைகள் (சிறை) வந்தால் தங்களிடம் பிளேன் ஏ, பி, மட்டுமல்ல சீ கூட இருக்கின்றது என்று சாகர கூறுகின்றார்.

Previous Story

ශ්‍රී ලංකාවේ පැරණිම Classic Collection එකක් - Classic Car - Old is Gold

Next Story

පාස්කු ප්‍රහාරය පිටුපස ශිරන්තිත්..? ෂැන්ග්‍රිලා සීසීටීවී එකෙන් ඒළියට ආපු රහස..සිහි නැතිවෙන අනාවරණයක්