நஜீப்
நன்றி: 11.10.2026 ஞாயிறு தினக்குரல்
சிரிலிய வங்கிக் கணக்குக்கு தப்பான தகவல் கொடுத்து அரச என்எஸ்பி. வங்கியில் பெற்றுக் கொண்ட நூறு இலட்சம் தொடர்பானது. கொழும்பு-ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்காக ஒரு ஸ்கேன் இயந்திரம் கொள்வனவு செய்வதற்கு என்று சொல்லப்பட்டது.
ஆனால் அந்த இயந்திரம் சீனாவிலிருந்து இலவசமாக கிடைத்திருந்தது.அப்படியாக இருந்தால் அந்தப் பணத்துக்கு என்னதான் நடந்தது.?அத்துடன் தாஜூதீன் கொலையுடன் சிரிலிய டிபேன்டர்(WPKA-0642) சம்பந்தப்படுகின்றது என்றும்குற்றச்சாட்டுக்கள்.
மேலும் இவர்கள் வாங்குவதாக சொன்ன இயந்திரத்தின் உச்ச விலையே ஐம்பது இலட்சம் ரூபா தானாம். அப்படியாக இருந்தால் அரசியல் அதிகாரத்தை பாவித்து ஒரு கோடி பெற்றுக்கொண்டது ஏன் என்ற கேள்வி. மறுபக்கத்தில் நாம் பலமுறை குறிப்பிட்ட 222222222V என்ற சிரந்தியின்வங்கிக்கணக்கு தங்கல்லை கார்ல்டன் முகவரியில் எப்படி துவங்கப்பட்டது போன்ற பல தில்லுமுல்லுகள் இதில் இருந்து வருகின்றன.





