சிகரெட்: நியூசிலாந்தில் நுாதன சட்டம்

 

நியூசிலாந்தில் சிகரெட் பிடிப்பதை அடியோடு நிறுத்த வகை செய்யும் நுாதன சட்டம் அடுத்தாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது.தென்மேற்கு பசிபிக் பிராந்திய நாடான நியூசிலாந்தில், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே சிகரெட் விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. இதை, 14 வயதாக குறைக்கும் புதிய சட்டம், அடுத்த ஆண்டு அமலுக்கு வருவதாக, நியூசி., அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், சிகரெட் விற்பனைக்கான வயது வரம்பு கூடிக் கொண்டே வரும் வகையில் இந்த சட்டத்தில் புதுமையான அம்சம் இடம் பெற்றுள்ளது. அதாவது, 2022ல், 14 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே சிகரெட் விற்பனை செய்யப்படும். இது, 2023ல், 15 வயதாகவும், 2024ல், 16 ஆகவும் உயர்ந்து கொண்டே வரும்.இந்த சட்டத்தால் இளைஞர்கள் சிகரெட் பிடிப்பதை உடனடியாக தடுக்க முடியாது என்ற போதிலும்,

 

ஆண்டுகள் செல்லச் செல்ல, இளைஞர்கள் சிகரெட் பிடிப்பது குறையும்.உதாரணமாக, இந்த சட்டம் அமலுக்கு வந்து, 65 ஆண்டுகள் ஆன பின், 80 வயதானவர்கள் மட்டும் தான் சிகரெட்டை வாங்க முடியும். நியூசிலாந்து அரசு சிகரெட் பழக்கத்தை தடுக்க, அதன் மீது அதிக வரிகளை விதித்து வருகிறது. இதன் காரணமாக சிகரெட் பிடிப்போர் சதவீதம், 11 சதவீதமாக குறைந்துள்ளது.

தினமும் சிகரெட் பிடிப்போர் சதவீதம், 9 சதவீதமாக சரிவடைந்துள்ளது. வருங்காலத்தில் நாட்டில் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை படிப்படியாக குறைத்து அறவே ஒழிக்க, புதிய சட்டம் வகை செய்யும் என, நியூசி., அரசு தெரிவித்துள்ளது.

Previous Story

தடுப்பூசிகள் ஒமிக்ரானை  எதிர்க்கும்?

Next Story

அல்லாஹ்வை அவமதிக்கும் வழக்கு: ஞானசாரர் விடுதலை!