சவுதியை காலி செய்ய ஹவுதி நடத்திய தாக்குதல்..

“டார்கெட் லாக்..” எண்ணெய் நிறுவனங்கள், ஏர்போர்ட் குறி

Houthi rebels warn US and others against joining Saudi Arabia in Yemen's civil war | AP News

சவுதி அரேபியாவுக்கும் ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சி படைகளுக்கும் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள விமான நிலையம், அராம்கோ எண்ணெய் சேமிப்பு மையம் உள்ளிட்ட 6 இடங்களைக் குறிவைத்து தாக்குதலை நடத்தியதாக ஹவுதி படைகள் அறிவித்துள்ளன.

மத்திய கிழக்கில் இன்னுமே பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. ஒரு பக்கம் அமெரிக்கா- ஈரான் இடையே போர் தொடரும் நிலையில், இன்னொரு பக்கம் சவுதி மீது ஹவுதி படைகள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

சவுதியின் முக்கிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஹவுதி படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

Houthi Saudi Arabia

சவுதி

இதற்கிடையே சவுதி மீது மீண்டும் ஹவுதி படை தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமனில் பொதுமக்கள் மீது சவுதி படைகள் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக ஹவுதி அறிவித்துள்ளது.

Saudi Aramco building in Riyadh damaged in attempted attack, says energy ministry - The Economic Times

இது தொடர்பாக ஹவுதி ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ, “பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அடுத்தடுத்து தாக்குதல்

ஏமனின் தைஸ் மற்றும் பானி ஹஷிஷ் பகுதிகளில் பொதுமக்கள் மீது சவுதி நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளோம்.

முதல் தாக்குதலில் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம், அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் சேமிப்பு மையம் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை மீது தாக்குதல் நடத்தினோம். அனைத்து டார்கெட்கள் மீதும் வெற்றிகரமாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இரண்டாவது தாக்குதல், சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள முக்கிய எண்ணெய் உற்பத்தி மையமான குரைஸ் பகுதியில் செயல்படும் அராம்கோ நிறுவனத்தை குறி வைத்து நடத்தினோம். மூன்றாவது தாக்குதல் தவாத்மி பகுதியில் உள்ள எண்ணெய் குழாய் வழித்தடத்தின் பம்பிங் ஸ்டேஷன் நம்பர் 8 மீது நடத்தினோம்.

இது தவிர சவுதி ராணுவத்தினரை குறிவைத்தும் தாக்குதல்களை நடத்தினோம். நஜ்ரானில் உள்ள சவுதி தேசிய பாதுகாப்பு படையின் முகாம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தினோம்” என்றார்.

Saudi Arabia is struggling to end its war in Yemen

அராம்கோ

சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் அராம்கோ முக்கிய பங்கு வகிக்கிறது. அதை காலி செய்ய வேண்டும் என்பதற்காகவே அராம்கோ மையங்களை குறிவைத்து ஹவுதி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதற்கு முன்பும் கூட சவுதியின் எண்ணெய் உள்கட்டமைப்பை முடக்கும் வகையிலேயே ஹவுதிக்கள் தாக்குதல்களை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மோதல்

இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் ஏமனின் பல்வேறு பகுதிகளில் சவுதி படைகள் 105 தாக்குதல்களை நடத்தியதாக ஹவுதி செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ குற்றஞ்சாட்டியுள்ளார்.

சனா, அல்-ஜவ்ஃப், தைஸ், அம்ரான், ஹஜ்ஜா, மாரிப் மற்றும் லஹ்ஜ் உள்ளிட்ட பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் குறிப்பிட்டார். இந்த தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

ஒரு பக்கம் ஈரான் பதற்றம் குறையாத நிலையில், இன்னொரு பக்கம் சவுதிக்கும் ஹவுதிக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்து வருகிறது. இதில் மற்ற அமைப்புகள் அல்லது மற்ற நாடுகள் உள்ளே வந்தால் நிலைமை மேலும் மோசமாகும் என்றே அஞ்சப்படுகிறது.

Previous Story

இஸ்ரேலில் ஆட்சி அமைக்கும் ஐசன்கோட்!