நஜீப்
நன்றி:09.08.2026 ஞாயிறு தினக்குரல்
மஹிந்த ராஜபக்ஸாவுக்கு மூன்றாவது முறையும் ஜனாதிபதியாவதில் சட்டத்தில் இடமில்லாததால் கோட்டா 2019ல் ஜனாதிபதி வேட்பாளராக வந்தார். இரட்டைப் பிரசா உரிமை உள்ள நிலையிலே மனிதன் சட்ட விரோதமாக வேட்பாளராக வந்தார் என்றும் சர்ச்சை இன்றும் விவாதப் பொருளாகி வருகின்றது.
தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்ற ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்டார் என்றும் இவர் மீது பரவலான குற்றச்சாட்டு. மேலும் கடுமையான பேரினவாதத்தைக் கிளறியே கோட்டா அதிகாரத்துக்கு வந்ததும் தெரிந்ததே.
ஆனால் வந்த வேகத்திலே சுவரில் பட்ட பந்துபோல மனிதன் அதிகாரத்தை விட்டு பின்கதவால் ஓட வேண்டி வந்தது.
மொட்டுக் கட்சியின் இன்றைய அவலத்துக்கும் இவர்தான் காரணம். ஆனால் இப்படி ஒரு மனிதன் அதிகாரத்துக்கு வந்து கட்சியையும் சீரழித்து மூக்குடைபட்டதாலே அனுர அதிரடியாக ஜனாதிபதியாக வர முடிந்தது.
அந்த வகையில் கோட்டா நாட்டுக்கும் ஜேவிபி-என்பிபிக்கும் ஒரு அதிர்ஸ்டம்-வரப்பிரசாதம்.!





