கிளர்ச்சி பின்னடைவு!

நஜீப்

நன்றி 01.11.2026  ஞாயிறு தினக்குரல்

அரசுக்கு எதிராக பௌத்த தேரர்களை முன்னிறுத்தி எதிரணியினர் நடாத்திவந்த பௌத்த தேரர்களின் போராட்டங்கள் தற்போது பின்னடைவை சந்தித்திருக்கின்றன. இது எந்த நேரத்தில் என்ன உருவத்திலும் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம்.

பொது மக்களிடம் தாம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காத காரணத்தாலே இவர்கள் தமது போராட்டங்களை பின்னகர்த்தி இருக்கின்றார்கள்.

அதே நேரம் இவர்கள் ஜனாதிபதிக்கு ஏதாவது தீங்குகளை பண்ணலாம்என்ற ஒரு அச்சமும் பல்வேறு மட்டங்களில் காணப்படுகின்றது.

போராட்டங்களை நடாத்திய தேரர்களும் அவர்களுக்குப் பின்னணியில் இருந்தவர்களும் தற்போது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இரகசிய சந்திப்புக்களை நடாத்தி வருவது ஈஸ்டர் தாக்குதல் போன்ற பேரவுழிவு ஒன்றுக்கான முன்னேற்பாடுகளாகவும் இருக்கலாம் என்று ஊடகங்கள் பரவலாக பேசி கொண்டிருப்பதுடன் பாதுகாப்பு துறையினரையும் எச்சரித்து வருகின்றன.

எனவே சிறுபான்மை சமூகங்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

Previous Story

இரானின் 5000 ரகசியம் .......!

Next Story

Israel Election 2026 New Updates