நஜீப்
நன்றி 21.12.2025 ஞாயிறு தினக்குரல்
சார்ஸ் கீர்த்திரத்ன. ஒய்வு பெற்ற இராணுவ மற்றும் தபால் அதிகாரியும். பண்டாரநாயக்க மற்றும் ரீ.பீ.இலங்கரத்தனாவுடனும் நெருக்கமாக இருந்தவரும். இல.5-கொழும்பு வீதி கண்டி என்ற முகவரி. இந்த மழை மற்றும் பேரழிவு பற்றி அவர் சொல்லும் கதை இது.
1946லும் இதே விதமான ஒரு மழை வெள்ளம்-அழிவு. முதலில் அன்றும் இப்படித்தான் கடுகண்ணாவையில் ஒரு கல் சரிந்து கண்டி வர்த்தகர் இஸ்மாயிலின் மகன் உறவினர் நான்கு பேர் காரில் கொழும்பு சென்று வரும் வழியில் கல்சரிவுக்கு இலக்காகி பலியானார்கள்.
அவர்களைத் தனிப்பட்ட ரீதியில் நானும்; அறிவோன். இஸ்மாயில் மகன் நினைவாகத்தான் கண்டி மணிக்கூட்டுக் கோபுரம் நீர்மானிக்கப்பட்டது. அன்று பிரதமர் டி.எஸ். தான் கோபுரத்தைத் திறந்து வைத்தார். நானும் வைபத்தில் இருந்தோன்.
அன்று எனக்கு வயது பதினொன்று. இன்று எனக்கு வயது தொன்நூறு. கடுகண்ணாவை கல்சரிவு பேரழிவின் ஓர் குறியீடா!





