–நஜீப்-
நன்றி 10.11.2024 ஞாயிறு தினக்குரல்
தெற்கில் இன்று டசன் கணக்கான கட்சிகளும் சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் நிற்பது தெரிந்ததே. ஆனால் அனுர தரப்புக்கும் சஜித் தரப்புக்கும் தான் அங்கே மோதல். அதுவும் தனிக்குதிரை ஓட்ட இடைவெளி. ஆளும் தரப்பு பலமானதாக இருக்கும்.
பிரதான எதிரணி அதனைவிடவும் அரைப் பங்குக்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். எதிரணியில் தேர்தலில் நிற்போரில் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதி அனுரவுடன் இணக்க அரசியலுக்கு ஏற்கெனவே பச்சைக் கொடி காட்டி விட்டார்கள்.
ஆனால் வடக்குக் கிழக்கில் இதுவரை செல்வாக்கு மிக்க தரப்பாக இருந்த தமிழர்கள், வரலாற்றில் என்றுமில்லாத வகையில் இன்று சிறதுருண்டு போன அடம்பன் கொடியாக நிற்க்கின்றனர். அவர்கள் அரசியல் குழுக்களுக்கு இந்த முறை மூன்று இரண்டு இரண்டு இரண்டு ஒன்று ஒன்று ஒன்று என்ற அளவில்தான் உறுப்பினர்கள் தெரிவாகும் ஒரு நிலை. நாம் குறிப்பிடுகின்ற கணக்கு எது என்பது தமிழர்களுக்குப் புரியம் என்று நம்புகின்றோம்.
ஆளுக்கொரு பக்கம் நின்று இவர்கள் நடாளுமன்றத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும் கூவும் போது அது மீன் மார்க்கட் போலத்தான் இருக்கும். இது ஆரோக்கியமானதல்ல.!