ஐபிஎல்: 2 புதிய அணிகளும் நீக்கப்படுகிறதா?

ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள 2 புதிய அணிகளும் பங்கேற்று விளையாடுமா என்பதிலேயே தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் அகமதாபாத் மற்றும் லக்னோ என 2 புதிய அணிகளை பிசிசிஐ சேர்த்துள்ளது. இதற்காக இந்தாண்டு மெகா ஏலம் நடத்தப்படவுள்ளது.

ரசிகர்கள் கவலை புதிய சர்ச்சை புதிதாக வந்துள்ள 2 அணிகளும், ஏலத்தில் விடப்படும் வீரர்களில் யாரேனும் 2 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி லக்னோ அணி கே.எல்.ராகுல், ரஷித் கான் என முக்கிய வீரர்களுக்கு வலைவிரித்து வரும் நிலையில் தற்போது அனைத்து பணிகளையும் நிறுத்துமாறு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

இதற்கு காரணம் அகமதாபாத் அணி சர்ச்சை தான். சட்டவிரோதம் புதிய அணிகளுக்காக நடத்தப்பட்ட ஏலத்தில் அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம் வென்றது. ரூ.5,625 கோடி கொடுத்து அந்த நிறுவனம் வாங்கியது. ஆனால் ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் சில சட்ட விரோத நிறுவனங்களில் சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

பிசிசிஐ-க்கு சிக்கல் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆதாரங்கள் கிடைத்திருப்பதால், ஐபிஎல் நிர்வாக குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் அகமதாபாத் அணியுடன் சேர்த்து லக்னோ அணியும் அனைத்து பணிகளையும் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் விசாரணை முடித்து அறிக்கை வந்த பின்னரே புதிய அணிகளின் எதிர்காலம் தெரியும்.

எனவே அதுவரை எந்த வீரரையும் ஒப்பந்தம் செய்யக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் குழப்பம் புதிய அணிகள் ஒப்பந்தம் செய்த வீரர்களின் பட்டியலை வரும் டிசம்பர் 25ம் தேதிக்குள் வெளியிட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அது தற்போது டிசம்பர் 30ம் தேதி வரை நீட்டித்தும் பிசிசிஐ அறிவித்துள்ளது. சூதாட்ட புகார் என்பதால் இரு அணிகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்றும், அவற்றினை நம்பி ஒப்பந்தம் செய்த கே.எல்.ராகுல், ரஷித் கான் போன்ற வீரர்களின் நிலை என்ன என்றும் குழப்பம் எழுந்துள்ளது.

Previous Story

மதம் மாறும் மலையாள இயக்குநர் அலி அக்பர்!

Next Story

முஸ்லிம் என்பதால் விரட்டப்பட்டேன்.-ஜாகீர் உசேன்