நன்றி: 02.02.2025 ஞாயிறு தினக்குரல்
கண்டி-உடதலவின்ன இந்த நாட்டில் பெரும் எண்ணிக்கையான எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் செறிந்து வாழ்கின்ற ஒரு கிராமம். சமூக ஊடகங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் செயல்பாடுகள் காரணமாக வாசிகசாலைகள் வெறிச்சோடிப்போய் இருக்கின்ற ஒரு காலகட்டத்தில் உடதலவின்னயில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக வாசிகசாலை துவங்கி வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.
தனது ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு அதன் நிருவாகம் பல்வேறு மட்டங்களை (பாடசலை மட்டம் ஏழு பிரிவுகள் திறந்த போட்டி-1) மையப்படுத்தி கட்டுரை மற்றும் சித்திரப் போட்டிகளை நடாத்தி வெற்றியாளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்க இருக்கின்றது.
இந்த பரிசளிப்பு விழாவுக்கு தென் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.எம்.எம்.மசாஹீர் பிரதம அதிதியாக வருகை தர இருக்கின்றார். விஷேட அதிதிகளாக ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி அதிபர் எம்.ஏ.எம்.தனுஸ் மற்றும் முக்தார் ஜமால்தீன் (லண்டன்) பள்ளிப் பரிபாலன சபைத்தலைவர் எம்.ஏ.எம்.சஹிட் அவர்களும் சிறப்புப் பேச்சாளராக சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ஜீப்ரி உட்பட பலர் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
விழா முன்னாள் அதிபர் எம்.ஜீ.நிலாப்தீன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இவரே இந்த வாசிகசாலையின் முன்னோடியுமாவர். பரிசளிப்பு விழா இன்று
ஞாயிற்றுக் கிழமை (02.02.2025)
காலை 9 மணிக்கு
உடதலவின்ன-ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி
அஸ்ரஃப் அரங்கில் நடைபெறும்.