ஈஸ்டர் வழக்கு புதிய தகவல்!

நஜீப்  

 நன்றி: 20.09.2026 ஞாயிறு தினக்குரல் 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நாம் சில வாரங்களுக்கு முன்னர் அலாவுத்தீன் என்ற ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு சாரா ஜெஸ்மின் இந்தியாவுக்குத் தப்பிப்போக உதவிய கதையையும் சொல்லி இருந்தோம்.

இதே அலாவுதீன் தான் மன்னார் பிரதேசத்தில் கோட்டாவின் ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைகளுக்குப்  பொறுப்பாக இருந்தவர்.  அத்துடன் இவரது மகளின் கணவர் இன்சாப். (இப்ராஹிம் மகன்) அவரும் ஈஸ்டர் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்.

அலாவுதீன் மகள் பாத்திமா சிப்கா கைதாகி கோட்டா ஜனாதிபதியானதும் அசாதாரணமாக விடுதலை செய்யப்பட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில் அரசியல்வாதியான ரிசாட் பதியுத்தீனது பெயரும் பல இடங்களில் உச்சரிக்கப்படுகின்றது. இதனை நாம் இங்கு மறைத்துப்பேச வேண்டியதில்லை.

இப்படி மேலதிக செலியுஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் நீதிமன்த்தில் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். சஹ்ரானுக்கு பல வழிகளிலும் ரிசாட் பதியுத்தீன் ஒத்துழைப்பு வழங்கி இருப்பது விசாரணைகளில் தெரிய வந்திருக்கின்றது என்றும் திலிப அங்கு தெரிவித்திருந்தார்.

 

Previous Story

පාස්කු ප්‍රහාරය පිටුපස ශිරන්තිත්..? ෂැන්ග්‍රිලා සීසීටීවී එකෙන් ඒළියට ආපු රහස..සිහි නැතිවෙන අනාවරණයක්

Next Story

නාමල්ට වෙන දේ මෙන්න.කොත කොට උඩ. පොහොට්ටුව කටූ ගෙට