இஸ்ரேல் சபாநாயகர் பொறுப்பை கைப்பற்றிய எதிர்க்கட்சிகள்!

நெதன்யாகு கதை முடிந்தது..

இனி அவ்வளவு தான்

Israel's parliament has elected Matan Kahana as its new speaker with 66 votes, replacing Amir Ohana.⁣ ⁣ Kahana secured the backing of opposition parties and Arab lawmakers, defeating Likud candidate O

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆட்சி அமைக்க தேவையான தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இருப்பினும் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சியை தக்கவைப்பார் என்று கூறப்பட்ட நிலையில் புதிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் சபாநாயகர் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு கூட்டணி வேட்பாளரை வீழ்த்தி காடி ஐசன்கோட்டின் எதிர்க்க்டசி கூட்டணி வேட்பாளர் அமோக வெற்றி பெற்றுள்ளார். இது பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் பதவியை இழப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தமுள்ள 120 இடங்களில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 61 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இருப்பினும் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ‘லிகுட்’ கட்சி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அந்த கட்சி மட்டும் தனித்து 27 இடங்களில் வெற்றி பெற்றது.

அதேபோல் நெதன்யாகுவின் ‘லிகுட்’ கட்சி தலைமையிலான கூட்டணிக்கு 53 இடங்கள் கிடைத்தது. மறுபுறம் முன்னாள் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் தலைவரான காடி ஐசன்கோட்டின் ‘யாஷர்’ கட்சி 21 இடங்களிலும், அவரது கூட்டணி 48 இடங்களிலும் வெற்றி பெற்றது. மெஜாரிட்டிக்கு 61 இடங்கள் தேவை என்பதால் இரு கூட்டணிக்கும் பின்னடைவு ஏற்பட்டது.

இதனால் 19 இடங்களில் வென்ற அரபு கட்சிகள் கிங் மேக்கராக மாறின. இந்த அரபு கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை என நெதன்யாகு கூறிய நிலையில் ஒற்றுமை ஆட்சி அமைக்க காடி ஐசன்கோட்டுக்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால் காடி ஐசன்கோட் அவரது அழைப்பை மறுத்தார். காடி ஐசன்கோட் தரப்புக்கு அரபு கட்சிகள் ஆதரவளிக்க ரெடியாக உள்ள நிலையில் அவர் நெதன்யாகுவின் அழைப்பை புறக்கணித்தார்.

New Knesset speaker could be key to ousting Netanyahu as Israel's PM | Israel | The Guardian

இந்நிலையில் தான் இஸ்ரேலில் புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. நாடாளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களில் யார் அதிக ஓட்டுகளை பெறுகிறார்களோ அவர் தான் வெல்வார் என்று அறிவிக்கப்பட்டது.

இதில் நெதன்யாகு கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட சபாநாயகர் வேட்பாளர் ஓபிர் கட்ஸ் மொத்தம் 52 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.

மறுபுறம் எதிர்க்கட்சி கூட்டணியான காடி ஐசன்கோட்டின் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட சபாநாயகர் வேட்பாளர் மதன் கஹானா 66 ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

காடி ஐசன்கோட் கூட்டணிக்கு மொத்தம் 48 எம்பிக்கள் தான் உள்ளனர். ஆனால் அவரது வேட்பாளர் 66 ஓட்டுகளை பெற்றுள்ளார். இதன்மூலம் அரபு கட்சிகளின் 18 எம்பிக்கள் (அரபு கட்சிக்கு மொத்தம் 19 எம்பிக்கள்..

நேற்று ஒருவர் வரவில்லை) காடி ஐசன்கோட் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துள்ளனர். இதனால் தான் அவர் 66 ஓட்டுகளை பெற்றுள்ளார்.

இதன்மூலம் காடி ஐசன்கோட் கூட்டணியை ஆதரிப்பதில் அரபு கட்சிகள் உறுதியாக உள்ளன. இது பிரதமர் தேர்விலும் நடக்கும் பட்சத்தில் காடி ஐசன்கோட் இஸ்ரேல் நாட்டின் பிரதமராவார். அதோடு மிக நீண்ட கால பிரதமர் என்ற பெயர் எடுத்த பெஞ்சமின் நெதன்யாகு தனது பதவியை இழப்பார்.

பெஞ்சமின் நெதன்யாகு முதல் முதலாக கடந்த 1996 ஜூன் 18 ல் பிரதமராகி 1999 ஜூலை 8 வரை அந்த பதவியில் இருந்தார். அதன்பிறகு 2009 மார்ச் 31ம் தேதி மீண்டும் பிரதமரான நெதன்யாகு தொடர்ந்து 2021 ஜூன் 31 வரை அந்த பதவியில் இருந்தார்.

பிறகு ஒன்றரை ஆண்டுகள் பிரதமர் பதவியில் இல்லாத நெதன்யாகு மீண்டும் 2022 டிசம்பர் மாதம் பிரதமராகி தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில் அவரது பதவியை பறிக்க எதிர்க்கட்சிகளும், அரபு கட்சிகளும் தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Previous Story

පාස්කු ප්‍රහාරය! සම්පූර්ණ කතාව -තුන්වැනි කොටස