அரசுக்காக குடிகள் வீதியில்!

நஜீப்
நன்றி 25.10.2026 ஞாயிறு தினக்குரல்

கடும்போக்கு இனவாத பௌத்த தேரர்களும் எதிரணி அரசியல்வாதிகளும் அரசுக்கு எதிராக சிறு சிறு குழுக்களாக கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற அதே நேரம் அரசுக்கு ஆதரவாக பௌத்த தேரர்களும் குடிமக்களும் இன மத பேதங்களை மறந்து ஆயிரக்கணக்கில் மாபெரும் பேரணிகளை நகரங்களில் நடத்திக் கொண்டு வருவதை கடந்த வாரம் அவதானிக்க முடிந்தது.

இந்த பேரணிகள் வருகின்ற நாட்களில் இன்னும் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான்.அதே நேரம் தலைநகரில் வரலாறுகாணாத அரசு ஆதரவுப் பேரணி ஒன்று பற்றியும் தற்போது ஆராயப்பட்டுவருவதாக தகவல்.

இந்தப் பேரணி நடக்குமாக இருந்தால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடாத்திய போது மக்கள் மில்லியன் கணக்கில் தெஹ்ரான் வீதிகளில் இறங்கி அரசுக்கு தமது ஆதரவை வழங்கியது போல ஒரு காட்சியாகத்தான் இது அமையலாம் என்று எதிர்பாக்க முடியும்.

Previous Story

சீனாவை விட்டு வெளியேறும் இளைஞர்கள்! 😱 பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் என்ன நடக்கிறது?

Next Story

இனி பழைய டிவிகளுக்கு காலம்