பௌத்தம் புனிதமடைகின்றது!

நஜீப்
நன்றி 25.10.2026 ஞாயிறு தினக்குரல்

ஞானசார தேரர் விவகாரத்தை முன்னிறுத்தி ஆரம்பமான அரசுக்கு எதிரான போராட்டங்கள் இன்று பகிரங்கமாகவே அரசை பதவியில் இருந்து விரட்டியடிக்கின்ற போராட்டமாக திசைமாறி இருக்கின்றது.

இதன் பின்னணியில் மொட்டுக் கட்சியும் ராஜபக்ஸாக்களும் இருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டுக்கள். இருபக்க கதைகளையும் அவதானிக்கின்றபோது தேரவாதம் மகாயானம் என்ற பிரிவுகளுக்கு மத்தியில் மஹிந்த வாதம்என்ற ஒரு பிரிவும் துவங்கிவிடுமோஎன்ற நிலை நாட்டில் காணப்படுகின்றது.

இப்படி ஒரு பிரிவு பற்றி ஏற்கெனவே பல தரப்பினர் உச்சரித்தும் அதன் தேவை பற்றியும் பகிரங்கமாக பேசியும் வந்திருக்கின்றார்கள். ஆனால் இது ஆரோக்கியமானதல்ல.

ஆனாலும் இன்று அப்படி ஒரு அணி செயல்படுவதை நாட்டு நடப்புக்களை வைத்த அவதானிக்க முடிகின்றது. வன்முறையாளர்களின் இந்த அடாவடித்தனங்களால் பௌத்தம் புனிதமடையும்.

போலிகளையும் பௌத்த விரோதிகளையும் மக்கள் கண்டறிய இது நல்லதொரு சந்தர்ப்பம் என்று பேரின சமூகத்தின் மத்தியில் இன்று பரவலான கதைகளும் நம்பிக்கையும்.

 

Previous Story

இனி பழைய டிவிகளுக்கு காலம்

Next Story

බුර්කාර් කසුන්ගේ Kingsbury ගේ#ම එලියට | ආපු වෙලාවල් ,Room Number , Room වල හමු වූ අය මෙන්න | 1 2 3 4 5 6