அரசின் நிலைப்பாடு!

-நஜீப்-

அண்மையில் இந்தியாவுக்குப் போய் இருந்த நமது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்திய அரசியல் தலைவர்களுடன் என்னதான் பேசி வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தாலும். அவர் அங்கம் வகிக்கின்ற அரசாங்கம் சில விடயங்களில் தெளிவாக இருப்பதை உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார்.

என்னதான் இருந்தாலும் பேரினத்தார் சம்மதம் இல்லாமல் எந்தத் தீர்மானங்களையும் எடுக்க முடியாது என்று அவர்கள் ஊடகங்கள் முன்னே பகிரங்கமாக தெரிவித்திருந்ததன் மூலம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திவ விட்டார். இது இலங்கையில் அரசியல் உரிமைகளை எதிர்பார்க்கின்ற சிறுபான்மை சமூகங்களுக்கும்,

இந்தியாவுக்கும் அவர்  அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபட சொல்லி விட்டார். பேரினத்தார் ஒரு போதும் சிறுபான்மை சமூகங்களுக்கு உரிமைகளை தட்டில் வைத்துக் கொடுக்கப் பேவதில்லை. இதனை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 13.02.2022

Previous Story

இஷான் கிஷனுக்கு  ஜாக்பாட்

Next Story

ஆப்கன் மக்கள் எதிர்ப்பு 2001 SEP 11