நன்றி 01.11.2026 ஞாயிறு தினக்குரல்
கடந்த வாரம் அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் 1982-1983 ஆகிய ஆண்டுகளில் கல்வி பயின்ற பயிற்சி ஆசிரியர்களின் ஒன்று கூடலொன்று காத்தான்குடி மற்றும் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலை ஆகிய இடங்களில் இருநாள் அமர்வாக நடைபெற்றது.
44 வருடங்களுக்குப் பின்னர் நடைபெற்ற இந்த சந்திப்பில் முதல் நாள் அமர்வில் தம்முடன் இருந்து இறையடி சேர்ந்தவர்களுக்கான பிரார்த்தனை ஒன்றும் நடைபெற்றது.
அத்துடன் இந்த அமைப்பை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக ஒரு நிருவாக சபை நியமிக்கப்பட்டது. அதன் தலைவராக திருகோணமலை எம்.பி.எம்.முஸ்தபா தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் இந்த அமர்வில் அட்டாளைச்சேனையில் கல்வி பயின்ற அனைத்து பயிலுனர்களையும் அவர்களின் உறவுகளையும் ஒன்றிணைத்து ஒரு அமைப்பைத் தோற்றுவிப்பது பற்றிய கருத்தும் முன்வைக்கப்பட்டது.
இரண்டாம் நாள் அட்டாளைச்சேனை ஆசிரியகலாசாலையில் நடைபெற்ற சந்திப்புக்கு கல்லூரியின் தற்போதய அதிபர் தலைமை தாங்கினார். அந்த வைபவத்தில் மூத்த விரிவுரையாளர்கள் பொன்னாடை அணிவித்துக் கொளரவிக்கப்பட்டனர்.




