ஹமாஸ் தலைவரை கொன்றது இப்படிதான்- இஸ்ரேல்!

Group of People Waving the Flag of Israel

”ஹமாஸ் தலைவன் முகமது சின்வார் உடலை ஹமாஸ் அமைப்பின் சதி செயலுக்கு முக்கிய பங்கு வகித்த சுரங்கத்தில் இருந்து மீட்டோம்” என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Latest Tamil News

மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசா அடங்கிய பாலஸ்தீனத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து, துல்லிய தாக்குதல்கள் நடத்தி, இஸ்ரேல் படைகள் கொன்று வருகின்றன.

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியே, அதன் ராணுவப் பிரிவு தலைவர் முகமது டெய்ப் ஆகியோர், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். கடந்தாண்டு அக்டோபரில், ஹமாஸ் பிரிவின் காசா தலைவரான யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்.

Israel reveals tunnel under Gaza hospital where it says body of Hamas  military chief was found

இதைத் தொடர்ந்து, அவருடைய இளைய சகோதரரான முகமது சின்வார், ஹமாஸ் பிரிவின் தலைமையை ஏற்றார். காசாவின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள யூரோப்பியன் மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் படைகள் துல்லிய தாக்குதல்கள் நடத்தின. அப்போது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் காசா தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், ஹமாஸ் தலைவன் கொலை பின்னணி விவரங்களை இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் கூறியதாவது: 

காசா மருத்துவமனையின் கீழ் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் ஹமாஸ் தலைவர் முகமது சின்வாரின் உடலை கண்டுபிடித்தோம். ராணுவ நடவடிக்கையின் போது இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த இடத்தை ஹமாஸ் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி உள்ளது. மற்றொரு மூத்த ஹமாஸ் தலைவரும், ரபா படைப்பிரிவின் தளபதியுமான முகமது ஷபானாவும் இறந்து கிடந்தனர். மேலும் பல உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவர்களது உடலை அடையாளம் காணும் பணி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

5 பேர் சுட்டுக்கொலை!

ரபா நகரில் அமெரிக்க ஆதரவுடன் காசா மனிதாபிமான அறக்கட்டளையின் நிவாரணப் பொருள் விநியோக மையம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவுப் பொருள் விநியோக மையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பாலத்தீனர்கள் 5 பேரை இஸ்ரேல் படையினர் சுட்டுக்கொன்றனர்.

தங்கள் படைகளை நோக்கி முன்னேறி வந்த சிலரை எச்சரிக்கும் வகையில் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Previous Story

உதவி பொருட்களுடன் காசா நோக்கி சென்ற படகு தடுத்து நிறுத்தம்!

Next Story

சிறைச்சாலை நாடகம்