ஷோயிப் மாலிக் மூன்றாவது திருமணம் – சானியா மிர்சா உறவு என்ன ஆனது?

இந்திய முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பிரிந்த பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தான் சனா ஜாவேத் யார்? இருவருக்கும் இது எத்தனையாவது திருமணம்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. ஹைதராபாத்தை சேர்ந்த இவர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். பல சாம்பியன் பட்டங்களையும் வென்று அசத்தினார். இந்நிலையில் தான் கடந்த 2010ம் ஆண்டில் அவர் திருமணம் செய்தார். பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை அவர் கரம் பிடித்தார்.

இந்தியராக இருக்கும் சானியா மிர்சா, சோயிப் மாலிக்கை திருமணம் செய்தது அப்போது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது. இருப்பினும் சானியா மிர்சா தொடர்ந்து இந்தியாவுக்காக டென்னிஸ் விளையாடினார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அவரது பெயர் இசான் மிர்சா மாலிக். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு முதல் சானியா மிர்சா-சோயிப் மாலிக் தம்பதி தொடர்பான விவாகரத்து செய்தி வெளியாகி வந்தது.

ஷோயிப் மாலிக் - சானியா விவாகரத்து

குறிப்பாக சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராமில் சோயிப் மாலிக் தொடர்பான விபரம் மற்றும் அவருடன் சேர்ந்து எடுத்த போட்டோக்களை நீக்கியது பரபரப்பை கிளப்பியது. ‛‛விவாகரத்து கடினமானது”.. சில நாட்களுக்கு முன்பு சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராமில், ‛‛விவாகரத்து என்பது கடினமானது” எனக்கூறி உருக்கமாக பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.

இது அவர்களின் விவாகரத்து தொடர்பான செய்திக்கு வலு சேர்க்கும் வகையில் இருந்தது. இந்நிலையில் தான் இப்போது சோயிப் மாலிக் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பான போட்டோக்களை இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இதன்மூலம் அவர்களின் திருமணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

3வது திருமணம்

ஷோயிப் மாலிக் இரண்டாவது திருமணம்: சானியா மிர்சாவுடனான உறவு என்ன ஆனது?

அதேபோல் சானியா மிர்சா-சோயிப் மாலிக் இடையே கருத்து வேறுபாடு இருந்ததும், சானியா மிர்சாவை, சோயிப் மாலிக் பிரிந்து இருப்பதும் இந்த திருமணம் மூலம் உறுதியாகி உள்ளது. இதன்மூலம் சோயிப் மாலிக் 3வது திருமணத்தை செய்துள்ளார். சோயிப் மாலிக் முதலில் ஆயிஷா சித்திக் என்பவரை கரம் பிடித்தார்.

அவரை விவாகரத்து செய்த பிறகு சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் பிரிந்த நிலையில் சோயிப் மாலிக் சனா ஜாவேத்தை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தான் சோயிப் மாலிக் திருமணம் செய்த நடிகை சனா ஜாவேத் யார்? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சனா ஜாவேத் பாகிஸ்தானில் நடிகையாக இருக்கிறார்.

இவர் உருது மொழி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். கடந்த 2012ம் ஆண்டு அவர் ‘ஷெர்-இ-ஜாத்’ எனும் தொடர் மூலம் அறிமுகமாகி பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இவர் நடித்த Khanni எனும் காதல் சார்ந்த சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார். கடந்த 2020 அக்டோபர் மாதம் சனா ஜாவேத் பாடகர் உமைர் ஜாஸ்வாலை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் கராச்சியில் உள்ள அவரது வீட்டில் எளிய முறையில் நடந்தது. இருப்பினும் இந்த திருமணம் என்பது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து தனித்தனியாக வாழ தொடங்கினர். இதற்கிடையே தான் சோயிப் மாலிக்குடன் சனா ஜாவேத் ‛டேட்டிங்’ செல்வதாக தகவல்கள் பரவின. மேலும் கடந்த ஆண்டு சனா ஜாவேத் பிறந்தநாளுக்கு சோயிப் மாலிக் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது ‛‛Happy Birthday Buddy” என அவர் கூறியிருந்தார். இதன்மூலம் இருவரும் நெருக்கமாக இருப்பது உறுதியாகி உள்ளது. அதன்பிறகு இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோக்களை சோயிப் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் தான் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

2010-ம் ஆண்டில் சானியா – ஷோயிப் திருமணம்

ஷோயிப் மாலிக் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களது திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

ஷோயிப் மாலிக் உடனான திருமணத்திற்கு முன்பு, சானியா மிர்சா தனது குழந்தைப் பருவ நண்பரான சோராப் மிர்சாவுடன் நிச்சயம் செய்திருந்தார். ஆனால், சில காரணங்களால் சோராப் – சானியாவின் நிச்சயம் ரத்து செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் ஷோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஷோயிப், சானியா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. சானியா, ஷோயிப் தம்பதிக்கு ஐந்து வயதில் ஓர் ஆண் குழந்தையும் உள்ளது.

கடந்த புதன்கிழமையன்று, சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் மற்றும் விவாகரத்து என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டார்.

 
ஷோயிப் மாலிக் இரண்டாவது திருமணம்: சானியா மிர்சாவுடனான உறவு என்ன ஆனது?

திருமணம் மற்றும் அதில் ஏற்படும் விவாகரத்து மிகவும் கடினமானது. ஆனால், நாம் எப்போதும் கடினமான விஷயங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சானியா தனது பதிவில் கருத்து தெரிவித்திருந்தார்.

அந்தப் பதிவைப் பார்த்த பல பயனர்கள் ஷோயிப், சானியா இடையிலான உறவு முற்றிலும் மோசமடைந்து இருக்க வேண்டும் என்றும் இருவரும் விவாகரத்து செய்திருப்பார்கள் என்றும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தனர்.

சனா ஜாவேத் யார்?

பாகிஸ்தானை சேர்ந்த நடிகையான சனா ஜாவேத், உருது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல தொடர்களில் நடித்துள்ளார். அவர் 2012இல் ஷெர்-இ-ஜாத் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

ஷோயிப் மாலிக் இரண்டாவது திருமணம்: சானியா மிர்சாவுடனான உறவு என்ன ஆனது?

காதல் நாடகமான கானியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பிறகு அவர் அங்கீகாரம் பெற்றார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழ் அவர் லக்ஸ் ஸ்டைல் விருதுகளிலும் பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.

அவரது சமூக நாடகங்களான ருஸ்வாய், டன்க் மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றன.

அவர் 2020இல் பாகிஸ்தானிய நடிகரும் பாடகர் மற்றும் பாடலாசிரியருமான உமைர் ஜஸ்வாலை திருமணம் செய்தார்.

சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் பிரிந்ததாக சியாசட் இதழ் தெரிவித்துள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் மேலும் சனா, உமைர் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை சமூக ஊடக கணக்குகளில் இருந்து நீக்கியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் விமர்சனங்கள்

ஷோயிப் மாலிக் இரண்டாவது திருமணம்: சானியா மிர்சாவுடனான உறவு என்ன ஆனது?

சில நெட்டிசன்கள் ஷோயிப் மாலிக் செய்துகொண்ட மூன்றாவது திருமணத்திற்கு சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ஏராளமான நெட்டிசன்கள் அவரை விமர்சித்தும் வருகின்றனர்.

ஷோயிப்பின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு அஜிசியா என்ற பதிவர், “அந்தப் பெண் உங்களை முழு நாட்டையும் எதிர்த்து திருமணம் செய்துகொண்டார். மக்கள் அவரது தேசிய உறுதிப்பாட்டையே கேள்வியெழுப்பினர். அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது. ஆனால், நீங்கள் அவரை ஏமாற்றிவிட்டீர்கள். வாவ் மேன்… வாவ் மேன்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஹீபா அர்மான் என்ற பதிவர், “ஆச்சர்யமாக இருக்கிறது. நடந்துள்ளதை என்னால் நம்ப முடியவில்லை!” என்று பதிவிட்டுள்ளார்.

எக்ஸ் சமூக ஊடகத்தில், #ShoaibMalik, #Divorce, #SaniaMirza ஆகிய ஷேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன.

Previous Story

வாராந்த அரசியல் 21.01.2024

Next Story

உலகின் செல்வ செழிப்புமிக்க அமீரக குடும்பம்